கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பிரபல நடிகர்! சோகத்தில் ரசிகர்கள்
தென் கொரியாவைச் சேர்ந்த நடிகர் ஒருவர் ஹாலோவீன் திருவிழா கொண்டாட்டத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் லீ ஜி ஹான்
தென் கொரியாவின் சியோல் நகரில் இதாவோன் மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஹாலோவீன் திருவிழா கொண்டாடப்படுகின்றது. இந்த திருவிழாவில் ஒரு லட்சத்திற்கும் மேல் மக்கள் கூடி கொண்டாடுவார்கள்.
இந்த வருடமும் குறித்த கொண்டாட்டத்தில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்ட நிலையில், திடீரென தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.
இந்த நெரிசலில் கூட்டத்தில் பலரும் நசுக்கப்பட்டதுடன், இதுவரை 151 பேர் உயிரிழந்தும் உள்ளதோடு, 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் தென் கொரியாவை சேர்ந்த நடிகர் மற்றும் பாடகரான லீ ஜி ஹான் என்பவரும் உயிரிழந்துள்ளதாக 935 என்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனம் உறுதிப்படுத்தி உள்ளது.
குறித்த நடிகரின் பணிகளை கையாண்டு வந்த இந்த நிறுவம், எங்களது நிறுவனத்தின் விலைமதிப்பில்லா குடும்ப உறுப்பினராக இருந்தவர் என்றும் வானில் நட்சத்திரம் போல் மின்னியவர்... எங்களை விட்டு சென்று விட்டார் என்றும் அவரது மறைவால் துயரில் இருக்கும் அவருடைய குடும்பத்தினருக்கு எங்களது இரங்கல்களை தெரிவித்து கொள்கிறோம் என்று கூறியுள்ளது.
ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ள நிலையில் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.