ஸ்டைலான கெட்டப்பில் தல அஜித்! எப்படி இருக்கிறார் தெரியுமா? காட்டுத் தீயாய் பரவும் அரிய புகைப்படம்
அஜித் - எச்.வினோத் கூட்டணியில் உருவாகி உள்ள வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்டது.
இன்னும் ஒரு சண்டை காட்சி மட்டுமே எஞ்சியுள்ளது. இதனை தற்போது ஐதராபாத்தில் படமாக்கி வருகின்றனர்.
வலிமை அப்டேட்டுக்காக ஓராண்டுக்கு மேலாக காத்திருக்கும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, இன்று வலிமை படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

எந்தவித முன் அறிவிப்பும் இன்றி வெளியான இந்த மோஷன் போஸ்டருக்கு ரசிகர்களிடையே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. அது மாத்திரம் இன்றி நடிகர் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் தற்போது வைரலாக்கி வருகின்றனர்.
