விடாமுயற்சி படத்திற்காக உடல் எடையை அதிரடியாக குறைத்த அஜித்… வைரல் புகைப்படம்
ஸ்லிம்மான தோற்றத்தில் த்ரிஷாவுடன் அவர் இடம்பெற்றுள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
நடிகர் அஜித்குமார்
தமிழ் திரையுலகின் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் அஜித்குமார். கடைசியாக ‘துணிவு’ படத்தில் நடத்திருந்த இவர், அடுத்து விடாமுயற்சி படத்தில் நடிக்கின்றார். 90களில் திரைக்கு வந்து இன்றுவரை தமிழ் சினிமாவில் நிலைத்திருக்கும் நடிகர் அஜித்குமார்.
காதல் மன்னன், ஆக்ஷன் ஹீரோ, வில்லன் என பல வேடங்களில் ரசிகர்கள் கொண்டாடும் நாயகர்களில் ஒருவர் அஜித்.
அஜித் அவர் ஒப்பந்தமாகும் எந்த படத்திற்கும் அவருடைய முழு ஈடுபாட்டையும் கொடுத்து உழைக்கக்கூடியவர் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். ஒரு வருடத்திற்கு ஒரு படத்தில் மட்டுமே கமிட் ஆகும் அஜித்குமார், கடைசியாக துணிவு படத்தில் நடித்திருந்தார்.
இப்படம் மிகப்பொரும் ஹிட் கொடுத்தது. இத்திரைப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியிருந்தார். அவரை பிடித்து ஒரு வழியாக ‘விடாமுயற்சி’ படத்தில் நடிக்க வைக்க ஒப்புக்கொண்டுவிட்டனர், படக்குழுவினர்.
இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார். இவர் ஏற்கனவே கலக தலைவன், தடம், தடையர தாக்க உள்ளிட்ட சில படங்களை இயக்கியுள்ளார்.
அஜித்தின் வைரல் புகைப்படம் விடாமுயற்சி படத்தை, லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த நிறுவனம், படம் குறித்த அறிவிப்பை பல மாதங்களுக்கு முன்பு வெளியிட்டதே தவிர, இதையடுத்து படம் குறித்த வேறு எந்த அப்டேட்ஸையும் இன்றளவும் வெளியிடவில்லை.
விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பிற்கான வேலைகள், அஜர்பைஜானில் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் அஜித்குமாருக்கு தற்போது 52 வயதாகிறது. இவர், சமீபத்தில் நடித்திருந்த அனைத்து படங்களிலுமே உடல் எடை அதிகரித்துதான் காணப்பட்டார்.
கடைசியாக ‘விவேகம்’ படத்திற்காக தனது உடலை ஃபிட்டாக வைத்திருந்த அஜித், அதையடுத்து வந்த அனைத்து படங்களிலும் நார்மல் ஆகவே இருந்தார். இதையடுத்து, இவர் விடாமுயற்சி படத்திற்காக உடல் எடையை குறைத்துள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் அஜித்குமாரின் தற்போதைய புகைப்படம் தற்போது இணையதளத்தில் தீயாய் பரவிவருகின்றது. இதில், அவர் உடல் எடை மெலிந்து காணப்படுவதாகவும், விடாமுயற்சி படத்திற்காக அவர் எடை குறைந்திருக்கலாம் என்று பலரும் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |