ரேஸ் காரில் மாஸ் காட்டிய நடிகர் அஜித்: மெய்சிலிர்க்க வைக்கும் வைரல் காட்சி!
நடிகர் அஜித் துபாயில் கார் ரேசிங்கில் பங்கேற்றுள்ளார்.குறித்த வீடியோ தற்போது இணையத்தளத்தில் அசுர வேகத்தில் பரவி வருகின்றது.
நடிகர் அஜித்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் நடிகர் அஜித். அஜித் நடிப்பில் கடைசியாக வெளியாகிய “துணிவு” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனை தொடர்ந்து தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் “விடாமுயற்சி” திரைப்படத்திற்கான ஷீட்டிங் இடம்பெற்று வருகின்றது. இதில் அஜித்திற்கு ஜோடியாக த்ரிஷா நடித்து வருகிறார்.
விடா முயற்சி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்து முடிந்த நிலையில், பைக்கை எடுத்துக் கொண்டு பல்வேறு இடங்களுக்கும் சுற்றுலா சென்றிருந்தார்.
சிறு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அஜர்பைஜானிலேயே இரண்டாம் கட்ட படப்பிடிப்பும் ஆரம்பமானது அதனை அஜித் ரசிகர்கள் இணையத்தில் பெரிதும் கொண்டாடினர்.
அதன் பின்னர் பின்னர் உடல் நலப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்துக்கொண்டு அறுவைசிகிச்சை முடிந்த மறுநாளே மகன் பள்ளியில் நடந்த விழாவில் கலந்து கொண்டு அனைவரையும் அஜித் வியப்பில் ஆழ்த்தியிருந்தார்.
இந்நிலையில் விடாமுயற்சி படப்பிடிப்பில் மீண்டும் கலந்துகொள்ளும் முன் துபாயில் அவர் கார் ரேசிங்கில் பங்கேற்றுள்ளார். ரேசிங் டிராக்கை பார்வையிட்டு, கார்களை உற்று நோக்கிய அஜித், பிறகு அதனை களத்தில் வேகமாக ஓட்டிய வீடியோ தற்போது இணையத்தில் காட்டு தீ போல் பரவி வருகின்றது.
Another Video of Our CHIEF #AjithKumar without Watermark
— Kannan Pandian (@Kannan_1363) June 26, 2024
?#RacingLife?️?#VidaaMuyarchi #GoodBadUgly pic.twitter.com/wHTYsDl8B3
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |