Net worth: கோலிவுட்டை கலங்கடித்த அஜித்தின் சொத்து மதிப்பு... எவ்வளவு தெரியுமா?
இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் தான் ரசிகர்களால் தல என கொண்டாடப்படும் நடிகர் அஜித்.
நடிகர் அஜித்
90களில் திரைக்கு வந்து இன்றுவரை தமிழ் சினிமாவில் நிலைத்திருக்கும் நடிகர் அஜித்குமார். காதல் மன்னன், ஆக்ஷன் ஹீரோ, வில்லன் என பல வேடங்களில் ரசிகர்கள் கொண்டாடும் நாயகர்களில் ஒருவர்.
அஜித் நடிப்பில் இதுவரையில் 63 திரைப்படங்கள் வெளியாகியுள்ளது.அஜித் நடிப்பில் இறுதியாக "குட் பேட் அக்லி" (Good Bad Ugly) திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.
அஜித் நடிக்கும் 64வது திரைப்படத்திற்கு AK 64 என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார், மேலும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது.படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சொத்து மதிப்பு
இந்நிலையில் நடிகர் அஜித்தின் சொத்துமதிப்பு பற்றி செய்திகள் இணையத்தில் உலாவருகின்றன. நடிகர் அஜித்திற்கு சென்னையில் பல கோடி மதிப்பிலான வீடு இருக்கிறது.
இதுதவிர, துபாயிலும் சொந்தமாக சொகுசு வீடு ஒன்றை வைத்துள்ளார். மோட்டார் ஸ்போர்ட்ஸ் ஆர்வலரான அஜித், ஏராளமான சொகுசு கார்களை வைத்திருக்கிறார்.
நடிகர் கார்கள் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். ரேடியோ சிட்டி அறிக்கையின்படி, அஜித் ரூ.36 கோடி மதிப்புள்ள சொகுசு கார்களை வைத்திருக்கிறார், அதில் ஒரு லம்போர்கினி மற்றும் ரூ.34 கோடி மதிப்புள்ள BMW 7 சீரிஸ் ஆகியவை அடங்கும்.
BMW 740 Li Car ரூ. 1.5 கோடி, Land Rover Discovery ரூ. 1.30 கோடி, Ferrari 458 Italia ரூ. 4 கோடி மதிப்புள்ள கார்களை வைத்துள்ளார்.
மேலும் BMW R 1250 GS Adventure ரூ. 22 லட்சம் மதிப்புள்ள பைக்கை சுற்று பயணம் மேற்கொள்ள பயன்படுத்தி வருகிறதாகவும் கூறப்படுகிறது.
இது மாத்திரமன்றி, நடிகர் அஜித் தொழிலையும் நிர்வகித்து வருகிறார். பல முதலீடுகள் மூலம் சம்பாதித்து வருகிறார்.
இவரின் சொத்து மதிப்பு சுமார் ரூ. 350 தொடக்கம் 400 கோடிக்கும் மேல் இருக்கும் என கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |