பைக் ரைடர்களுக்கு பயிற்றுவிக்கும் நடிகர் அஜித்குமார் - இணையத்தை ஆக்கிரமிக்கும் வீடியோ
நடிகர் அஜித் பைக் ரைடிங் செய்பவர்களுக்கு பயிற்றுவிக்கும் காணொளியொன்று தற்போது வெளியிடப்பட்டு இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருகின்றது.
நடிகர் அஜித்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் நடிகர் அஜித். அஜித் நடிப்பில் கடைசியாக வெளியாகிய “துணிவு” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் “விடாமுயற்சி” திரைப்படத்திற்கான ஷீட்டிங் இடம்பெற்று வருகின்றது. இதில் அஜித்திற்கு ஜோடியாக த்ரிஷா நடித்து வருகிறார்.
விடா முயற்சி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்து முடிந்த நிலையில், பைக்கை எடுத்துக் கொண்டு பல்வேறு இடங்களுக்கும் சுற்றுலா சென்றிருந்தார்.

சிறு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அஜர்பைஜானிலேயே இரண்டாம் கட்ட படப்பிடிப்பும் ஆரம்பமானது அதனை அஜித் ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி தீர்த்தனர்.
யாரும் எதிர்பாராத விதமாக கடந்த 7ஆம் திகதி அஜித் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

வழக்கமான பரிசோதனைக்கு தான் மருத்துவமனைக்கு சென்றிருப்பதாக, அஜித் தரப்பில் அருந்து தகவல் வெளியிடப்பட்ட போதிலும் முதுகு தண்டுவடத்தில் பிரச்னை, மூளையில் கட்டி என அவரது உடல் நிலை குறித்து அடுத்தடுத்து பரவிய வதந்திகள் ரசிகர்கள் மற்றும் திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
அதனை தொடர்ந்து அஜித்தின் காதுக்கு கீழ் பகுதியில் உள்ள நரம்பில் வீக்கம் இருந்த நிலையில் சிறிய அறுவைச் சிகிச்சை மூலம் அதனை சீர் செய்ததாக மருத்துவர்கள் தரப்பில் இருந்து தகவல் வெளியானது.

அறுவைசிகிச்சை முடிந்த மறுநாளே மகன் பள்ளியில் நடந்த விழாவில் கலந்து கொண்டு அனைவரையும் அஜித் வியப்பில் ஆழ்த்தியிருந்தார். இதன் பின்னர் தான் அஜித் ரசிகர்கள் ஆறுதல் அடைந்தனர்.
இந்த நிலையில் அறுவை சிகிச்சை முடிந்த ஒரு சில வாரங்களிலேயே நடிகர் அஜித் AK MOTO RIDE நிறுவனம் சார்பில் மோட்டார் பைக் சுற்றுப் பயணத்திற்கு தயாராகும் பைக் ரைடர்களுக்கு பயிற்சியளித்து வருகின்றார்.

அஜித் பைக் ரைடிங் செய்பவர்களுக்கு பயிற்றுவிக்கும் வீடியோ தற்போது இணையத்தில் காட்டு தீ போல் பரவி வருகின்றது.
The Class by ..... Today#Ajithkumar pic.twitter.com/9P6dj3vFac
— Suresh Chandra (@SureshChandraa) March 20, 2024