தாயின் உடலை கண்ணீர் மல்க தோளில் சுமந்து சென்ற நடிகர் அஜித் - காணொளி வைரல்
நடிகர் அஜித் குமார் தன்னுடைய அன்னையின் உடலை தோளில் சுமந்து செல்லும் காணொளி வைரலாகி வருகின்றது.

வைரல் காணொளி
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி சென்னை பாலவாக்கத்தில் உள்ள இல்லத்தி நேற்று உடல்நல குறைவால் காலமானார்.
வயோதிகம் மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக மோகினியின் உயிர் பிரிவிற்கு காரணமாக இருந்துள்ளது.
தாய் இருந்த நேரத்தில் நடிகர் அஜித் டுபாயில் இருந்துள்ளார். இதன் பின்னர் நேற்று சென்னையை வந்தடைந்தார்.

அஜித்தின் தாயார் மோகினியின் இறுதிச்சடங்கு சென்னை பாலவாக்கம் இல்லத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நடைபெறுகிறது.
நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணிக்கு 89 வயதாகும்.

இந்நிலையில், நடிகர் அஜித் தனது தாயின் உடலை இறுதி சடங்கிற்காக தோளில் சுமந்து சென்றார்.
சென்னை பாலவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து பெசண்ட் நகர் மின்மயானத்திற்கு உடல் கொண்டு செல்லப்பட்டு, நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் இறுதிச்சடங்குகள் நடைபெற்றன.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |