அஜித் பிறந்த நாள் 2025: ஷாலினியின் முதல் பதிவு- ‘தல’வின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
நடிகர் அஜித்தின் பிறந்தநாளான இன்று அவரின் சொத்து மதிப்பு பற்றி புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித் குமார்
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராகவும் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர் தான் அஜித்குமார்.
இவர் தமிழ் சினிமாவில் 60 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவர் நடிப்பில் GBU திரைப்படம் வெளியாகி வசூல் வேட்டையால் பணத்தை அள்ளிக் கொண்டிருக்கிறது.
கடந்த 1990ஆம் ஆண்டு “என்வீடு என்கணவர்” என்றத் திரைப்படத்தில் சிறிய வேடத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். இந்த திரைப்படத்திற்கு பிறகு கடந்த 1993 ஆம் ஆண்டு அமராவதி திரைப்படத்தில் நடித்து ஹீரோவாக தலை காட்ட ஆரம்பித்தார்.
அமராவதியில் ஆரம்பித்த தற்போது துணிவாக விடாமுயற்சியை தொட ஆரம்பித்திருக்கிறார்.
பத்ம பூஷண் விருது
மேலும், தமிழ் சினிமாவில் சிறந்த காதல் ஜோடி யாரென்று கேட்டால் யோசிக்காமல் வாயில் வரும் பெயர் அஜித் - சாலினி என்று சொல்வார்கள்.
இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த காதல் ஜோடிகளாக தற்போது வரை வலம் வருகின்றார்கள். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகளும் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நடிகர் அஜித்திற்கு தமிழ்நாடு சார்பில் பத்ம பூஷண் விருது கொடுக்கப்பட்டது.
மேலும் நான்கு விஜய் விருதுகள், மூன்று சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள், மூன்று பிலிம்பேர் விருதுகள் தென் மற்றும் மூன்று தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளை வென்றுள்ளார்.
சொத்து மதிப்பு விவரங்கள்
இதற்கிடையில் இன்றைய தினம் 54 ஆவது பிறந்த நாளை குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக கொண்டாடுகிறார்.
இந்த விஷேச நாளை முன்னிட்டு அவரின் மனைவியும், நடிகையுமான சாலினி சில புகைப்படங்களுடன் வாழ்த்துச் செய்தி சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். அதே சமயம் அஜித் குமாரின் சொத்து மதிப்பு விவரங்களும் வைரலாக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், நடிகர் அஜித்திற்கு சென்னையில் பல கோடி மதிப்பிலான வீடு இருக்கிறது. இதுதவிர, துபாயிலும் சொந்தமாக சொகுசு வீடு ஒன்றை வைத்துள்ளார்.
BMW 740 Li Car ரூ. 1.5 கோடி, Land Rover Discovery ரூ. 1.30 கோடி, Ferrari 458 Italia ரூ. 4 கோடி மதிப்புள்ள கார்கள் உள்ளன. அத்துடன் BMW R 1250 GS Adventure ரூ. 22 லட்சம் மதிப்புள்ள பைக்கை சுற்று பயணம் மேற்கொள்ள பயன்படுத்தி வருகிறதாகவும் கூறப்படுகிறது.
மேலும், நடிகர் அஜித் தனிப்பிட்ட தொழிலையும் நிர்வகித்து வருகிறார். பல முதலீடுகள் மூலம் வருமானம் வருகிறது.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. பதிவை பார்த்த ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் தங்களின் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |