திடீரென இறந்த அம்மா: அனைத்தையும் விற்ற பிரபல நடிகர்! அம்மா உணவகத்தில் சாப்பிடும் அவலம்
தனுஷ் நடிப்பில் வெளியான துள்ளுவதோ இளமை படத்தில் புதுமாக நடித்த தனுஷ், ஷெரின் இவர்களுடன் அபினய்யும் ஒருவர்.
இந்தப்படத்தில் தனுசுடன் இரண்டாவது ஹீரோவாக நடித்தவர் அபினய். பின்பு இரண்டு படங்களில் ஹீரோவாக நடித்தார். ஆனால் அவர் நடித்த படம் எதுவும் வெற்றிப்படமாக அமையவில்லை.
ஆக்ஷன் படங்களில் நடிப்பது கடினம் என்ற சூழ்நிலை ஏற்பட்ட நிலையில், எட்டு படங்களுக்கும் மேல் கைவிட்டுப் போனது.
விளம்பரப்படங்களில் நடித்தும் எந்தவொரு பயனும் இல்லாமல் போனது. இந்நிலையில் அவரது அம்மாவும் திடீரென இறந்துவிட்டதால், வறுமையின் பிடியில் மாட்டிக்கொண்ட இவர், தனது சொத்துக்களை அனைத்தும் விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
சமீபத்தில் அபினய் கொடுத்த பேட்டி ஒன்றில் இருந்த அனைத்தையும் விற்று விட்டேன். அம்மா உணவகத்தில் தான் சாப்பிடுகிறேன் என்று கண்ணீருடன் கூறியுள்ளார்.
