மறைந்த நடிகர் அபிநய் அந்த பழம்பெரும் நடிகையின் மகனா! வைரலாகும் அரிய புகைப்படம்
தனுஷ் அறிமுகப்படமான 'துள்ளுவதோ இளமை' மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகர் அபிநய்,அறிமுகமானார்.பல தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்த அவர், சினிமா வாய்ப்புகள் குறைந்தபோது துபாயில் வேலை பார்த்தார்.
பின்னர் மீண்டும் சினிமாவுக்கு திரும்பிய அவர், உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்றைய தினம் உறக்கத்திலேயே உயிர் நீத்தார்.

இந்நிலையில் இவரின் தாய் யார் என்பது குறித்த தகவல்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.
மறைந்த நடிகர் அபிநய்
தனுஷ் அறிமுகப்படமான `துள்ளுவதோ இளமை' படம் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் தான் அபிநய். அதன் பிறகு `ஜங்க்ஷன்', `சக்ஸஸ்', `தாஸ்', `பாலைவன சோலை', `ஆறுமுகம்', `ஆரோகணம்', `வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' எனப் பல தமிழ் படங்களில் நடித்தார்.

மலையாளத்திலும் நடிகர் ஃபஹத் பாசில் ஹீரோவாக அறிமுகமான `கையெத்தும் தூரத்து' படத்தின் மூலம் அறிமுகமாகி ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.
அதன் பிறகு சில வருடங்கள் துபாய் சென்று வேலை பார்த்தவர், மீண்டும் சினிமாவுக்கு வந்து `சிங்கார சென்னை' என்ற படத்தில் நடித்தார். ஆனாலும் அது பெரிய அளவில் கை கொடுக்காததால் விளம்பரப் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

மேலும் விஜய் நடித்த `துப்பாக்கி' மற்றும் சூர்யா நடித்த `அஞ்சான்' போன்ற படங்களில் வித்யுத் ஜம்வால், `பையா' படத்தில் மிலிந் சோமன் போன்றோருக்கு தமிழில் டப்பிங் பேசியது அபிநய் தான்.
டி ஆர் ராதாமணியின் மகனா?
இவர், பழம்பெரும் நடிகை டி ஆர் ராதாமணியின் மகன் என்பது திரையுலகிலும் கூட பெரும்பாலானவர்களுக்கு தெரியாது.

டி ஆர் ராதாமணி மலையாளத்தில் பல படங்களில் நடித்தவர், தமிழில் `வன்மம்', `மன்னர் வகையறா' போன்ற சில படங்களில் நடித்துள்ளார்.

இவரது மகன் தான் அபிநய் என்ற தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இவரின் இறப்புக்கு பின்னரே அபிநய் தனிமைப்படுத்தப்படார் என்பதும் கல்லீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |