தற்கொலை செய்ய துணிந்த நடிகர் அப்பாஸ்... பைத்தியமானாரா? வெளியான பலரும் அறியாத சோகம்
தமிழ் திரையுலகில் சாக்லேட் பாயாக வலம்வந்த நடிகர் அப்பாஸ், சினிமாவை விட்டு விலகி தான் கடந்து வந்த கஷ்டங்களை குறித்து மனம்திறந்து பேசியுள்ளார்.
நடிகர் அப்பாஸ்
நடிகர் அப்பாஸ் கதில் இயக்கத்தில் கடந்த 1996ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான் காதல்தேசம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
முதல் படத்திலேயே பெண்களின் மனதைக் கவர்ந்த நாயகனாக வலம் வந்தவர், தொடர்ந்து பல படங்களில் நடித்திருந்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என மொழிகளிலும் நடித்து வந்த அப்பாஸ் பின்பு சினிமாவில் சறுக்கலை சந்தித்தார்.
தொடர்ந்து உச்சத்தில் இருந்த இவர் பின்பு படங்கள் பெரும்பாலும் தோல்வி அடைந்ததால், சினிமா வாய்ப்பும் குறைந்துள்ளது. இதனால் குடும்பத்துடன் நியூசிலாந்திற்கு இடம் மாறினார்.
தற்கொலைக்கு முயன்ற தருணம்
சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், தான் சினிமாவில் இருந்து விலகி எதிர்கொண்ட கஷ்டங்கள் குறித்து மனம் திறந்துள்ளார்.
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்ய நினைத்ததாகவும், பின்பு ஒரு கட்டத்தில் தன்னை விட்டு காதலி சென்றதால், சாலையில் செல்லும் வாகனத்தில் விழுந்து இறந்துவிடலாம் என்றும் நினைத்தேன். ஆனால் அப்படி செய்தால் வாகனம் ஓட்டி வந்த நபரையும் பாதிக்கும் என்று அவ்வாறு செய்யவில்லையாம்.
பின்பு பொருளாதார ரீதியாக பல சறுக்கலை சந்தித்த இவர், வீட்டு வாடககை கொடுக்க முடியாமலும், சிகரெட் வாங்க கூட காசு இல்லாமல் தவித்திருக்கின்றார்.
நியூசிலாந்து சென்று ஆரம்பத்தில் கஷ்பட்ட அப்பாஸ், பின்பு குடும்பத்திற்காக மெக்கானிக் வேலையும் செய்ததுடன், டாக்சி ஓட்டவும் செய்துள்ளார். தற்போது இவரை நடிக்க அழைத்து அதிகமாக மெசேஜ் வருகின்றதாம்.
அதே போன்று தனக்கு பைத்தியம் பிடித்துவிட்டதாகவும், தான் இறந்துவிட்டதாகவும் சில தவறான வதந்திகள் பரவி வரும் நிலையில், அவையெல்லாம் இந்தியா வந்தால் சரியாகிவிடும் என்று பதில் அளித்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |