இவருக்கு மட்டும் வயதே ஆகாதா? வெள்ளை நிற புடையில் டிடியின் அசத்தல் காணொளி
தொகுப்பாளினி டிடி வெள்ளை நிற புடவையில் கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு அசத்தலாக நடனமாடி காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
தொகுப்பாளினி டிடி
கோலிவுட்டில் பெரும்பாலான நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கும் முன்னணி தொகுப்பாளினியாக வலம்வருபவர் தான் டிடி என்கிற திவ்யதர்ஷினி.
இவர் காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான நிலையில், எந்தவொரு பிரபலமும் முகம் சுழிக்காத அளவிற்கு தனது கேள்வியினை கலகலப்பான முறையில் எடுத்து வைக்கின்றார்.

பல முன்னணி பிரபலங்களையும் நேருக்கு நேர் பேட்டி எடுக்கவும் செய்துள்ளார். தற்போதும் இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. தொகுப்பாளினியாக மட்டுமின்றி சில படங்களிலும் நடித்துள்ளார்.
கடந்த 2014ம் ஆண்டு தனது நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களின் திருமணம் குறுகிய காலத்தில் விவாகரத்தில் முடிந்தது.

தற்போது 41 வயதாகும் டிடி தனிப்பட்ட வாழ்க்கையிலிருந்து மீண்டு வந்து, அவ்வப்போது புகைப்படங்கள், காணொளிகள் இவற்றினை வெளியிட்டு வருகின்றது. இவரது அடுத்த திருமணம் எப்போது என ரசிகர்களிடையே ஒரு கேள்வியும் எழுந்துள்ளது.
தற்போது சில குற்பிட்ட நிகழ்ச்சிகளை மட்டுமே இவர் தொகுத்து வழங்குகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |