நடிகர் அர்ஜுன் துரத்தி துரத்தி காதலித்த நடிகை யார் தெரியுமா?
பிரபல நடிகர் அர்ஜுனின் பழைய காதல் கதை தற்போது வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
நடிகர் அர்ஜுன்
தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங்காக வலம் வரும் நடிகர் அர்ஜுன், 1962ம் ஆண்டு மைசூரில் மாது கிரி என்ற இடத்தில் பிறந்தவர் ஆவார்.
தற்போது 62 வயதிலும் சினிமாவில் கலக்கி வரும் இவர், தமிழில் நன்றி என்ற படத்தில் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து, தற்போதும் முன்னணி நடிகராகவும் வலம் வருகின்றார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழி படங்களில் அசத்தி வருகின்றார். நடிகை நளினி உடல் இணைந்து, யார், நன்றி, எங்கள் குரல் என்ற மூன்று படங்களில் நடித்துள்ளார்.
நளினியுடன் நடித்த போது அவரது அழகும், தன்மையான குணம், வெள்ளந்தியான பேச்சு இவை அனைத்தும் அர்ஜுனுக்கு நளினி மீது காதல் ஏற்பட்டுள்ளது.
நளினியின் திருமணம்
அர்ஜுன் தனது காதலை தயாரான நிலையில், நளினி நடிகர் ராமராஜனை காதலித்த விடயம் அர்ஜுனுக்கு தெரியவந்த நிலையில், மனதளவில் நொறுங்கிய அர்ஜுன் கடைசிவரை தனது காதலை நளினியிடம் கூறாமல் விட்டுள்ளாராம்.
இந்த விவகாரம் நளினிக்கு திருமணம் முடிந்த பின்பு தான் வெளியே பரபரப்பாக பேசப்பட்டது. அர்ஜுனுடன் நளினிக்கு நல்ல நட்பு இருந்து வந்த நிலையில், அர்ஜுனுக்கு காதலாக மாறியது யார் என்ற படத்தின் போது தான் என்று கூறப்படுகின்றது.
நடிகை நளினி நடிகர் ராமராஜனை காதலித்து பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்த நிலையில், 1988ம் ஆண்டு சினிமாவை விட்டும் விலகினார்.
ஆனால் இவர்களின் திருமண வாழ்க்கை வெறும் 12 ஆண்டுகளில் முடிந்துவிட்டது. ஆம் நடிகர் ராமராஜனை விவாகரத்து செய்துவிட்டு தற்போது சில படங்கள் மற்றும் சின்னத்திரை சீரியல்களில் நளினி நடித்து வருகின்றார்.
காதல் தோல்வி ஏற்பட்ட பின்பு நடிகர் அர்ஜுன் 1988ம் ஆண்டு நிவேதிதா என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டு வாழ்வது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |