ஒரு மாதத்தில் நடக்கவிருந்த திருமணம்! நள்ளிரவில் காதல் ஜோடிக்கு நிகழ்ந்த சோகம்
திருமணத்திற்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில், காதல் ஜோடி நள்ளிரவில் விபத்தில் சிக்கி பலியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு மாதத்தில் நடக்கவிருக்கும் திருமணம்
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பாபிலோனா என்ற பெண் கிண்டியில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ள நிலையில், தனது உறவினரான ஆந்திராவைச் சேர்ந்த பிரசாத் என்பவரை காதலித்து வந்துள்ளார்.
பிரசாத்தும் தனியார் நிறுவனம் ஒன்றில் டிசைனிங் இன்ஜினியராகவும் வேலை செய்து வந்துள்ள நிலையில், இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு பின்பு காதலாக மாறியுள்ளது.
இவர்களின் காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியவந்த நிலையில், பெரியோர்களால் இவர்களது திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இன்னும் ஒரு மாதமே திருமணத்திற்கு இருக்கும் நிலையில், காதல் ஜோடி இருவரும் நள்ளிரவில் சினிமாவிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளனர்.
அப்போது எதிரே இரும்பு கம்பி எடுத்துவந்த லாரி மோதியதில் இருவரும் லாரிக்கு அடியில் சென்ற நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
இன்னும் ஒரு மாதமே திருமணத்திற்கு உள்ள நிலையில், இருவீட்டினரும் திருமண ஏற்பாடுகளை செய்து வந்த நிலையில், இவ்வாறு விபத்து ஏற்பட்டு காதல் ஜோடி உயிரிழந்தது சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.