சாலையில் வாக்கிங் சென்ற நபர்... மின்னல் வேகத்தில் இடித்து தள்ளிய கார்
வாக்கிங் சென்றவரை மின்னல் வேகத்தில் இடித்து தள்ளிவிட்டு சென்ற காரின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இடித்து தள்ளிவிட்டுச் சென்ற கார்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பிம்ப்ரி-சின்ச்வாட், காலேவாடி பிஆர்டி சாலையில் இன்று அதிகாலை ஒருவர் சாலையில் வாக்கிங் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது, பின்னால் வந்த கார் சாலையில் வாக்கிங் சென்ற நபர் மீது பயங்கரமாக மோதியது.
இந்த கார் விபத்தில் அந்த நபர் அடித்து தூக்கி எறியப்பட்டார். கண் இமைக்கும் நேரத்தில் இந்த விபத்தை ஏற்படுத்திய அந்தக் கார் மின்னல் வேகத்தில் சென்று மறைந்தது.
இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இது தொடர்பான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது சமூகவலைத்தளங்களில் இது குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.
A terrible accident has come to light from Pimpri-Chinchwad. A car driver hit a morning walker at high speed on the Kalewadi BRT road in the city.#pimprichinchwad #accidentefatal #accident #Pune #Maharashtra #viral #viralvideo #india pic.twitter.com/K13vTLtDAc
— Siraj Noorani (@sirajnoorani) March 10, 2023