சில நொடிகளில் என் வாழ்க்கையை தவறவிட்டிருப்பேன்- பதறவைக்கும் வீடியோ காட்சிகள்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் விஷால்.
இவர் செல்லமே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.
இவர் திமிரு, தாமிரபரணி, சண்டக்கோழி போன்ற பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.
அண்மையில் இவர் நடிப்பில் லத்தி, வீரமே வாகை சூடும் போன்ற திரைப்படங்கள் வெளிவந்தன.
லத்தி படத்தை புதுமுக இயக்குநர் வினோத்குமார் இயக்க, ராணா புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் விஷாலின் பிலிம் பேக்டரி நிறுவனமும் இணைந்து தயாரித்தது.
இந்தப் படத்தினை தொடர்ந்து விஷால் நடித்துவரும் புதிய திரைப்படம் மார்க் ஆண்டனி. இந்தப் படத்தை ஆத்விக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இதில் S.J.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
படப்பிடிப்பில் நடந்த விபத்து குறித்து விஷால் கருத்து
பான் இந்தியா படமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பின்போது விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.
அதாவது, லொறியொன்று கட்டுப்பபட்டை இழந்து நடிகர்களை நோக்கி வந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதுகுறித்து நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில், 'சில நொடிகளில் என் வாழ்க்கையை தவறவிட்டிருப்பேன். எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி. இந்த சம்பவத்தால் படிப்பிடிப்பில் என் கால்கள் மரத்து போய்விட்டன' என ட்வீட் செய்துள்ளார்.
Jus missed my life in a matter of few seconds and few inches, Thanks to the Almighty
— Vishal (@VishalKOfficial) February 22, 2023
Numb to this incident back on my feet and back to shoot, GB pic.twitter.com/bL7sbc9dOu