தூங்கச் சென்ற கணவர் கரிக்கட்டையாக கிடந்த அதிர்ச்சி! திருமணமான 6 மாதத்தில் அரங்கேறிய சோகம்
சென்னை பெரம்பூரில் வீட்டில் ஏ.சி. வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பால் வியாபாரி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புகை மண்டலமாகிய வீடு
சென்னை திருவிக நகரில் உள்ள குமரன் நகர் காலனியை சேர்ந்தவர் பிரபாகர். இவரது மகன் ஷியாம்(27). பால் வியாபாரம் செய்து வரும் இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.
தற்போது ஆடி மாதம் என்பதால் மனைவியை தாய் வீட்டிற்கு அனுப்பியுள்ள நேற்று தனது அறையில் ஷியானம் தூங்க சென்றுள்ளார். ஏசி போடப்பட்டிருந்ததால் கதவை உட்புறமாக தாழ்பாள் போட்டு தூங்கியுள்ளார்.
சிறிது நேரத்தில் ஷியாமின் அறையிலிருந்து புகை மண்டலமாக வெளியேறியதால் பெற்றோர்கள் உடனே தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
கரிக்கட்டையாக கிடந்த மகன்
உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அறையின் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்த போது ஷியாம் எரிந்த நிலையில் சடலமாக கிடந்தார். இதனையடுத்து, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து தொடர்பாக பொலிசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அந்த அறையில் இயங்கிக் கொண்டிருந்த ஏ.சி.வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருமணமாகி 6 மாதத்தில் மனைவியை இவ்வாறு அனுப்பிவிட்டு, விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டில் ஏசி வைத்திருப்பவர்கள் கவனம்
ஏ.சி பொருத்திய பிறகு அதன் பராமரிப்பில் கவனம் செலுத்த வேண்டும். மாதமிருமுறை ஏ.சி ஃபில்டரை கழற்றி சுத்தம் செய்ய வேண்டும்.
இதில் இருக்கும் தூசிகள் தான் ஏ. சி யை நீண்ட நாட்களுக்கு பிறகு இயக்கும் போது வெப்பம் உருவாகும் போது தீப்பற்றி வெடிக்க செய்கின்றன.
ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஏ.சி சர்வீஸ் செய்ய வேண்டும். அனுபவமிக்க ஏ.சி மெக்கானிக்குகளை கொண்டு சர்வீஸ் செய்ய வேண்டும்.
புகை அதிகம் இருக்கும் இடங்களில் வசிப்பவர்கள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பயன்படுத்த வேண்டும். ஏ.சி சரியான கண்டிஷனில் இருக்கிறதா என்பதை பரிசோதிக்க வேண்டும்.
குறிப்பாக குளிர்காலங்களில் ஏ.சியை பயன்படுத்தாமல் வைத்திருப்பார்கள். நீண்ட நாள்கள் கழித்து ஏ.சியை பயன்படுத்தும் போது ஏ.சியை சர்வீஸ் செய்த பிறகு பயன்படுத்த வேண்டும்.
ஏ.சி சர்வீஸ் செய்யும் போது கம்ப்ரஸர், காயில், ஏ.சியின் உள்ளே செயல்படும் ஃபேன் மோட்டார்கள், உள்ளிருக்கும் பெல்ட், கேஸ் அளவு அனைத்தையும் சரிபார்ப்பதும் அவசியம்.
