வறுமையில் தவித்த மாற்றுத்திறனாளி தம்பதி! வாட்ஸஆப் மூலமாக வளைகாப்பு நடத்திய நண்பர்கள்;
வறுமையில் வாடிய மாற்றுத்திறனாளி தம்பதியினருக்கு அவரது நண்பர்கள் வாட்ஸ் ஆப் மூலமாக நிதி திரட்டி வளைகாப்பு நடத்திய சம்பவம் அப்பகுதி மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் குமார். மாற்றுத்திறனாளியான இவர், அதே பகுதியை சேர்ந்த மாற்று திறனாளி பெண்ணான தமிழ் செல்வி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இதனிடையே, கர்ப்பிணியாக இருந்த இப்பெண்ணுக்கு வளைகாப்பு நடத்த போதிய வசதி இல்லாததால், தவித்து வந்த குமார். அன்னை தெரசா வாட்சப் குழுவில் இதுபற்றிய தகவல் பகிரப்பட்டிருக்கிறது.
இதன் பின்னர், பலரும் தங்களால் முடிந்த அளவு பணத்தை திரட்டி அனுப்பி வந்துள்ளனர். நண்பர்கள், வாட்சப் குழு உறுப்பினர்கள் சீர்வரிசை பொருட்களுடன் தமிழ் செல்வி- குமார் வீட்டுக்கு சென்றிருக்கிறார்கள்.
இதனால் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர் இந்த தம்பதியினர். மேலும், நண்பர்கள் தமிழ் செல்வி மற்றும் குமாருக்கு சந்தனம் பூசி சடங்குகளை செய்திருக்கிறார்கள்.
இதுகுறித்து மகிழ்ச்சியில் பேசிய குமார், கடந்த ஆண்டின் போது பீனிக்ஸ் சிறப்பு பள்ளி மற்றும் அன்னை தெரசா குழுவை சேர்ந்தவர்கள் எங்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.
9 மாத கர்ப்பிணியான என் மனைவி அன்னை தெரசா வாட்சப் குழு மூலமாக நிதி திரட்டி நண்பர்கள் வளைகாப்பு நடத்தியிருக்கிறார்கள்.
இதனால் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளோம் எனக்கூறியுள்ளார்.