அல்டிமேட்க்கு வைல்டு கார்டா போவீர்களா? அபிஷேக் அதிரடி பதில்
அல்டிமேட்க்கு வைல்டு கார்டா போவீர்களா என்ற ரசிகர்களின் கேள்விக்கு பிக் பாஸ் அபிஷேக் பதில் கொடுத்துள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அபிஷேக் தனது யூடுயூப் பக்கத்தில் எந்த வீடியோவையும் பதிவிடாமல் தான் வருகிறார்.
இருப்பினும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் அபிஷேக் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளித்திருந்தார்.

அப்போது இன்ஸ்டாவாசி ஒருவர் ‘பிக் பாஸ் அல்டிமேட்ல வைல்டு கார்டு போட்டியாளராக போறதுக்கு வாய்ப்பு இருக்கா ‘ என்று கேட்டிருந்தார்.
அதற்கு பதில் அளித்த அபிஷேக் ‘ஆமா, இந்தவாட்டி சாக்கு மூட்டைல அனுப்பறாங்க. வெண்ணிலா (வனிதா) அக்கா உருட்டுகட்டையை கையில் வைத்துக்கொண்டு அத கிழிச்சி ஓப்பன் பண்ண கேட்பாங்க’ என்று பதில் அளித்துள்ளர்.
வனிதாவை போல அபிஷேக்கையும் எலிமினேஷன் பின்னரே ரசிகர்கள் மிஸ் செய்தனர். அதனால் தான் அவர் மீண்டும் வைல்டு கார்ட் போட்டியாளராக அழைத்து வரப்பட்டார்.
ஒரு வேலை அபிஷேக் உள்ளே சென்றால் அவருக்கும் வனிதாவிற்கு கண்டிப்பாக எதாவது ஒரு பஞ்சாயத்து வந்து விடும்.
எனவே, அபிஷேக் செல்வாரா இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
அதே போல பிக் பாஸ் அல்டிமேட்டில் 16 போட்டியாளர்கள் கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்ட நிலையில் 14 பேர் மட்டுமே கலந்துகொண்டனர். மீதம் 2 போட்டியாளர்கள் விரைவில் கலந்துகொள்ள இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.