எங்கள் மகள் சோஷியல் மீடியாவில் இல்லை... மனைவி பற்றி மனம் திறந்த அபிஷேக் பச்சன்
பிரபல நடிகர் அபிஷேக் பச்சன் தனது மகள் ஆராத்யா சமூக ஊடகங்களிலும் இல்லாததற்காக காரணம் குறித்து பேசிய விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன்
இந்திய அளவில் பிரபலமான ஜோடியாக வலம் வந்தவர்கள் தான் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராயும் அவரது கணவர் அபிஷேக் பச்சனும்.
சினிமாத் துறையில் சந்தித்துக் கொண்ட இருவரும் காதலித்து பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஆராத்யா என்ற பெண் குழந்தை உள்ளார்.
சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகமே பொறாமை கொள்ளும் அளவுக்கு மகிழ்ச்சியான தம்பதிகளாக இருந்த இவர்கள், அண்மை காலமாக இருவரும் பிரிந்து வாழ்வதாக சர்ச்சைகளில் சிக்கினார்கள்.
ஆனால் இதுகுறித்து அவர்கள் பொது வெளியில் எந்தவொரு கருத்தையும் பகிர்ந்துக்கொள்ளவில்லை.
இந்நிலையில் நடிகர் அபிஷேக் பச்சனின் காளிதர் லாபட்டா ஜூலை 4-ம் தேதி ஜீ 5 ஓடிடி-ல் வெளியாகியிருக்கிறது.இந்தப் படத்துக்கான புரோமோஷன் நிகழ்ச்சிகளில் அபிஷேக் பச்சன் ஈடுபட்டுவருகிறார்.
இந்நிலையில் அண்மையில் நயன்தீப் ரக்ஷித் என்பவருடைய யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், ``எங்கள் மகள் ஆராத்யா பச்சனிடம் என் தந்தை பெரும் நடிகர், என் மனைவி உலகப் புகழ்பெற்ற நடிகை என்றெல்லாம் ஒருபோதும் பேசியதில்லை.
ஆனால், அவள் இப்போது வளர்ந்து விட்டாள். எல்லாவற்றையும் புரிந்து கொள்கிறாள் என்று நம்புகிறேன். எங்கள் மகள் ஆராத்யா எந்த சமூக ஊடகங்களிலும் இல்லை.அவளிடம் தொலைபேசியும் இல்லை.
இதற்கான பெருமை முழுக்க முழுக்க என் மனைவி ஐஸ்வர்யா ராயை மட்டுமே சேரும். எங்கள் குழந்தை எங்கள் குடும்பத்தின் பெருமை, மகிழ்ச்சி. நாங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்" என அபிஷேக் பச்சன் குறிப்பிட்டுள்ளார். குறித்த விடயம் தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |