அபிஷேக் பச்சனை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து வாழ்த்திய பெண்- விமர்சனத்தை கொட்டும் ரசிகர்கள்
பெண்ணொருவர் ஐஸ்வர்யா ராயின் கணவர் அபிஷேக் பச்சனை கட்டிப்பிடித்து நச்சு நச்சுனு முத்தம் கொடுத்த காட்சி ரசிகர்களின் கவனத்திற்கு சென்றுள்ளது.
பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் நேற்றைய தினம் 49 ஆவது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.
அவருக்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
எத்தனையோ பேர் வாழ்த்து தெரிவித்த போதிலும் டான்ஸ் மாஸ்டரும், இயக்குநரும், ஷாருக்கானின் நெருங்கிய தோழியுமான ஃபரான கானின் வாழ்த்து வீடியோ ரசிகர்களின் கவனத்திற்கு சென்றுள்ளது.
விமர்சனத்திற்குள்ளாகும் காணொளி
குறித்த காணொளியில், அபிஷேக் பச்சனை இறுக்கி அணைத்து கன்னத்தில் முத்தமாக கொடுத்திருக்கிறார் ஃபரா கான்.
என்னைய விடு தாயி என்பது போன்று அபிஷேக் பச்சன் ரியாக்ஷன் கொடுத்திருக்கிறார். முத்தம் வாங்கி கன்னம் வலித்துவிட்டது போன்று ரியாக்ஷன் செய்துள்ளார். “நான் இப்படி செய்வது பிடிக்காதது போன்று நடிக்கிறார் அபிஷேக். ஆனால் நிஜத்தில் அவருக்கு ரொம்ப பிடிக்கும்” என இன்ஸ்டாகிராமில் ஃபரா கான் தெரிவித்துள்ளார்.
ஃபரா கான் வெளியிட்ட வீடியோ ஐஸ்வர்யா ராய் ரசிகர்களுக்கு பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மனைவியான ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் சிறுவனாக இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வாழ்த்தியுள்ளார். ஆனால் இப்படியான பதிவை வெளியிட்ட ரசிகர்களை நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |