மனைவியுடன் அபிநய் கொண்டாடிய பிறந்தநாள்! தெறிக்கவிட்ட பிக்பாஸ் பிரபலங்கள்
பிக்பாஸ் பிரபலமான அபினய் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் பிக்பாஸ் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது.
பிக்பாஸில் சர்ச்சை
பிரபல ரிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 5ல் கலந்து கொண்ட அபிநய் 77 நாட்கள் உள்ளே இருந்தார். ஆனால் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த போது பாவனியுடன் காதல் என்று இவரது பெயர் பெரும் சர்ச்சையில் சிக்கியது.
ஒரு கட்டத்திற்கு பின்பு பாவனி அபினய் இருவரும் பேசிக்கொள்ளாமல் இருந்த நிலையில், மனைவியும் கோபித்துக்கொண்டு பிரிந்துவிட்டதாக கூறப்பட்டது.
ஆனால் இதனை எல்லாம் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 21 நாட்கள் இருந்த அபினய் தன்மீது இருந்த சர்ச்சையை துடைத்தார்.
பாம்பை விடாமல் துரத்தி சென்று தாக்கிய கீரி! இறுதியில் நடந்தது என்ன?
பிறந்தநாள் கொண்டாட்டம்
இந்நிலையில் பிக்பாஸ் அபினய் பிறந்தநாள் சமீபத்தில் கொண்டாடப்பட்ட நிலையில் இது குறித்த புகைப்படங்களை பிக்பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னர் ஆரி தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சோம்சேகர், ஐக்கி பெர்ரி, ஆரி, வனிதா, கணேஷ் வெங்கட்ராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு அபினய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.