விவேக் பற்றி அப்துல்கலாம் என்ன சொல்லியிருக்கிறார்? மகள் சொன்ன ருசிகர தகவல்
அப்துல் கலாம் மீது அதீத அன்பு கொண்ட விவேக், பசுமை கலாம் என்ற அமைப்பின் மூலம் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டுள்ளார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.
நடிகர் என்பதையும் தாண்டி சமூக சேவகராக அறியப்படுபவர் நடிகர் விவேக், படத்திலும் மூட நம்பிக்கைகளை தகர்க்கும் வண்ணமே வசனங்கள் இடம்பெற்றிருக்கும்.
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மீது அதிக அன்பு கொண்ட நடிகர் விவேக், மரக்கன்றுகளை நடத் தொடங்கினார், அப்துல் கலாமுடன் பலமுறை உரையாடியுள்ளார் விவேக்.

இதுகுறித்து அவரது அண்ணன் மகளான நசீமா மரைக்காயர் கூறுகையில், என் சித்தப்பா ஒருமுறை ராமேஸ்வரம் வந்திருந்த போது என்னிடம் விவேக்கை தெரியுமா? எனக் கேட்டார்.
அதற்கு நான், நன்றாக தெரியும், அவரது நகைச்சுவை எனக்கு பிடிக்கும் என்றேன், அதற்கு கலாமோ, அவர் நடிகர் மட்டுமல்ல, சிறந்த சமூக ஆர்வலர், மரக்கன்றுகளை நட வேண்டும் என்று மட்டும் தான் கூறினேன்,
அதை ஏற்றுக் கடைப்பிடித்து தமிழகம் முழுவதும் மரக்கன்றுகள் நடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். நல்லபிள்ளை” என்று தெரிவித்ததாக கூறியுள்ளார்.
