ABC ஜூஸ் குடிப்பதால் என்ன பலன்கள்! யாரெல்லாம் குடிக்கக்கூடாது?
ABC ஆப்பிள், பீட்ரூட் மற்றும் கேரட் கலந்த பானம் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி உடலை மெருகேற்றுவதில் சிறந்தது.
எடையை குறைப்பது, பொலிவான சருமம், இதயநோய், புற்றுநோயிலிருந்து பாதுகாப்பு என பல நன்மைகளை வாரி வழங்கக்கூடியது.
இதில் நமது உடலுக்கு தேவையான விட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் அடங்கியுள்ளன.
நம் உடலின் நச்சுக்களை வெளியேற்றி ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.
இதில் உள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகின்றன, புற்றுநோய் செல்களை அழிப்பதில் கில்லாடி.
தொடர்ந்து குடித்து வந்தால் உங்கள் தேகம் மினுமினுக்கும், கண்கூடாகவே அதை பார்க்கலாம்.
இதை எப்படி செய்வது? எப்போது சாப்பிடலாம்? யாரெல்லாம் குடிக்கக்கூடாது? என பல சந்தேகங்கள் இருக்கும். இதற்கெல்லாம் தீர்வாகிறது இந்த பதிவு,
செய்வது எப்படி?
சம அளவுகளில் ஆப்பிள், பீட்ரூட் மற்றும் கேரட்டை எடுத்துக் கொள்ளவும். மூன்றையும் சுத்தமாக கழுவி எடுத்த பின்னர், தோலை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும், இதனுடன் தேவைப்பட்டால் ஒரு டீஸ்பூன் அளவு எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளலாம்.
சர்க்கரை எதுவும் கலக்காமல் பருகவும்.
எப்போது குடிக்க வேண்டும்?
வெறும் வயிற்றில் காலை வேளையில் குடிப்பது பலனை தரும், அதாவது காலை உணவுக்கு ஒரு மணிநேரத்துக்கு முன்பாக அருந்தலாம்.
தவறும் பட்சத்தில் காலை உணவுக்கும், மதிய உணவுக்கும் இடைப்பட்ட நேரத்தில் பருகலாம்.
யாரெல்லாம் குடிக்கக்கூடாது?
சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீரகம் தொடர்பான பிரச்சனை இருப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்ளவும்.
நீரிழிவு நோயாளிகள் மற்றும் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களும் தவிர்ப்பது நலம்.
இதுதவிர Irritable Bowel syndrome உள்ளவர்களும் ABC ஜூஸை தவிர்க்கவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |