எங்க அப்பாவையா அவுட் ஆக்கின... ஆக்ரோஷமாக கத்திய ஏபி டிவில்லியர்ஸ் மகன்; இணையத்தில் ட்ரெண்டாகும் காணொளி!
நேற்றைய பெங்களூர்-மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டியில் மும்பை அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, பெங்களூர் அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் விராட் கோலியும், தேவ்தத் படிக்கலும் களமிறங்கினர்.
அதில் பும்ரா வீசிய ஆட்டத்தின் இரண்டாவது ஓவரில் தேவ்தத் படிக்கல் டக் அவுட்டாகி வெளியேறினார். இதனையடுத்து களமிறங்கிய ஸ்ரீகர் பரத்துடன் ஜோடி சேர்ந்த விராட் கோலி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அப்போது, ராகுல் சஹார் வீசிய 9-வது ஓவரில் சூர்யகுமார் யாதவிடம் கேட்ச் கொடுத்து ஸ்ரீகர் பரத் (32 ரன்கள்) அவுட்டானார். இதனைத் தொடர்ந்து புயலாட்டம் ஆடிய விராட் கோலியும் (51 ரன்கள்) ஆட்டமிழந்தார்.
பின்னர், மேக்ஸ்வெல் மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் கூட்டணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. மேக்ஸ்வெல் 56 ரன்கள் (37 பந்துகள், 6 பவுண்டரி, 3 சிக்ஸர்) அடித்து ஆட்டமிழந்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 165 ரன்களை பெங்களூரு அணி எடுத்தது. 167 ரன்கள் இலக்கை நோக்கி மும்பை அணி களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் டி காக் ஆகொய்ரோ ஆரம்ப பெங்களூர் பந்துவீச்சை நாலாபுறமும் தெறிக்க விட்டனர். தொடர்ந்து விளையாடிய மும்பை அணி 18.1 ஓவர்களில் 111 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் 54 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது.
இதில் ஹர்சல் படேல் 4 விக்கெட்டுகளும், மேக்ஸ்வெல் 2 விக்கெட்டுகளும், முகமது சிராஜ் 1 விக்கெட்டும் எடுத்தனர். இதனிடையே, இப்போட்டியில் பெங்களூரு அணி வீரர் ஏபி டிவில்லியர்ஸ் (AB de Villiers) மகன் செய்த செயல் இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.
அதில், பும்ரா வீசிய போட்டியின் 19-வது ஓவரில் விக்கெட் கீப்பர் டி காக்கிடம் கேட்ச் கொடுத்து ஏபி டிவில்லியர்ஸ் அவுட்டானர். இதனைக்கண்ட ஏபி டிவில்லியர்ஸின் மகன் ஜான் ரிச்சர் கோபத்தில் நாற்காலியின் மேல் ஆக்ரோஷமாக கையால் அடித்தார்.
அப்போது அருகில் இருந்த அவரது தாய், இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Bumrah poi thalai maraivu aairu
— சுல்தான் (@jillu_offl) September 26, 2021
Una konnalum kondruvan ivan
KuttyABD 🔥 pic.twitter.com/rhJ7zTaOhF
Me after watching bhaubali
— ANMOL KAUR (@anmol_banga) September 26, 2021
#RCBvsMI pic.twitter.com/Oe0QJb6XgS