பால் பாக்கெட் கலரில் இவ்வளவு விஷயம் இருக்கா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
பொதுவாகவே அனைவரும் தினசரி சந்தைகளில் பால் வாங்குவது வழக்கம் ஆனால் பால் வாங்கும் போது எதனை பார்த்து வாங்க வேண்டும் என்று கேட்டால் நம்மில் பலரிடமும் தெளிவான பதில் இருப்பதில்லை. நாம் தினசரி பயன்படுத்தும் பாலை வாங்கும் போது கவனிக்க வேண்டிய முக்கியமான விடயங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பால் பாக்கெட்டுகளை பொருத்தவரையில் 4 நிறங்களில் தயாரிக்கப்படுகின்றன. பச்சை ,நீலம் ,ஆரஞ்சு , மற்றும் பிங்க் நிறம் ஆகியவற்றில் காணப்படுகின்றது. இது காரணமின்றி இவ்வாறு 4 நிறங்ளில் தயார்செய்யப்படவில்லை.
இவை ஒவ்வொரு நிறத்துக்கும் இடையில் கலோரி, புரதம் மற்றும் கொழுப்பு ஆகியவற்றின் அளவுகளுக்கிடையிலான வேறுபாடு காணப்படுகின்றது. மற்றும் அதனை யாரெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்பதையும் இந்த நிறங்கள் குறிப்பிடுகின்றன.
நிறத்தின் அடிப்படையில் பால் பாக்கெட்டை ...
நீலநிற பாக்கெட்டில் உள்ள பாலை குழந்தைகள், நோயாளிகள் மற்றும் வயதானவர்கள் பயன்படுத்தலாம் இதில் கொழுப்பின் அளவு 3 வீதம் மாத்திரமே காணப்படுகின்றது.
பச்சை நிற பால் பாக்கெட்டை 40 வயதுக்கு மேற்பட்வர்கள் பயன்படுத்துவது சிறந்தது. அதில் 4.5 வீதம் கொழுப்புச்சத்து காணப்படுகின்றது.
பிங்க் நிறத்தில் உள்ள பால் பாக்கெட்டை உடல் எடையை குறைக்கும் முயற்சியில் உள்ளவர்கள் பயன்படுத்தலாம் அதில் வெறும் 1.5 வீதம் தான் பொழுப்புச்சத்து காணப்படுகின்றது.
ஆரஞ் நிற பாக்கெட்டில் உள்ள பாலை பருகுவது உகந்ததல்ல இரு இனிப்பு பண்டங்கள் செய்வதற்காக தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் 6 வீதம் கொழுப்புச்சத்து காணப்படுகின்றது.
ஏனைய பொருட்களை விட பால் பொருட்களை வாங்கும் போது உற்கத்தி திகதி குறித்து கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |