எடையை மின்னல் வேகத்தில் குறைக்கும் ஆட்டு ரத்த பொரியல்! வெறும் பத்தே நிமிடத்தில் செய்து ருசிக்கலாம்
ஆட்டு ரத்தப் பொரியல் பலருக்கு பிடித்த அசைவ உணவு.
அசைவ உணவுகளை சாப்பிட்டால் பொதுவாக எடை அதிகரிக்கும். ஆனால் ஆட்டு ரத்தப் பொரியல் எடையை குறைக்க உதவி புரிகின்றது.
ஆட்டு ரத்தத்தில் பி வைட்டமின் உள்ளது.
இது உடலில் உள்ள கொழுப்பை எரிக்க உதவுகிறது. கூடுதலாக, இதில் புரோட்டீன்கள் அதிகமாகவும், மாட்டிறைச்சியை விட நிறைவுற்ற கொழுப்பு குறைவாக இருப்பதால் டயட்டில் இருப்பவர்களுக்கு மிகவும் அருமையானது.
ரத்தப் பொரியலை இந்த வாரம் வீட்டில் செய்து சாப்பிடுங்கள்.
அதுவும் கிராமத்து ஸ்டைலில் ரத்த பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- ஆட்டு ரத்தம் – 1 கப்
- பூண்டு - 1 பல் (தட்டியது)
- சின்ன வெங்காயம் - 15
- பச்சை மிளகாய் - 3
- மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
- மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
- சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிது
- உப்பு - சுவைக்கேற்ப
- துருவிய தேங்காய் - 1 கப்
- எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
- கடுகு - 1/2 டீஸ்பூன்
- உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
- சீரகம் - 1/2 டீஸ்பூன்
செய்முறை
பாத்திரம் ஒன்றில் முதலில் ஆட்டு இரத்தத்தை கையால் நன்கு பிசைந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தினை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்பு அதில் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பூண்டு சேர்த்து வதக்கியதும் அதில் வெங்காயத்தைப் போட்டு, சிறிது உப்பு தூவி நன்கு வதக்க வேண்டும்.
பிறகு அதில் இரத்தத்தை ஊற்றி கிளறி விட வேண்டும்.
இரத்தம் நன்கு வெந்ததும், சுவைக்கேற்ப உப்பு, மிளகுத் தூள், சீரகத் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
இறுதியாக துருவிய தேங்காயைத் தூவி ஒருமுறை கிளறி விட்டு இறக்கினால், சுவையான ஆட்டு ரத்த பொரியல் தயார்.