தாங்கும் சக்தி இல்ல.. என் மகளுடன் வாழுங்கள் மாப்பிள்ளை- ரவி மோகனிடம் கெஞ்சிய மாமியார்
“தாங்கும் சக்தி இல்ல.. என் மகளுடன் வாழுங்கள் மாப்பிள்ளை“ என ரவிமோகன் மாமியார் விடுத்த கோரிக்கை சமூக வலைத்தளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.
ரவிமோகன் விவாகரத்து சர்ச்சை
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் ரவிமோகன். கடந்த சில வருடங்களாக பாரிய சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.
மனைவி பிரிந்து வாழ்ந்து வரும் ரவிமோகன், தெரபிஸ்ட்டான கெனிஷாவை திருமணம் செய்து கொள்ளப்போவதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகி வருகிறது.
இந்தச் சூழலில் ஆர்த்தியின் தாயாரான சுஜாதா விஜயகுமார், முதல் முறையாக மௌனம் கலைத்துள்ளார்.
இந்த நிலையில் அவர் வெளியிட்ட அறிக்கையில், நான் கடந்த 25 வருடங்களாக தயாரிப்பாளராக இருக்கிறேன்.
நான் பெரிதாக மீடியா முன் வந்தது கிடையாது. தற்போது ரவிகேட்கும் கேள்விகளுக்கு விளக்கம் கொடுக்கும் அளவுக்கு கட்டாயம் ஏற்பட்டுள்ளது. நான் ஒரு கொடுமைச் செய்யும் பெண்ணாக பேசப்பட்டு வருகிறது.
என்னுடைய மகளின் வாழ்க்கைக்காக மாத்திரமே இவ்வளவு நாட்கள் அமைதியாக இருந்தேன். ஆனால் உண்மையை சொன்னால் தான் பிரச்சினை முடிவு என்றால் உண்மையை சொல்வேன்.
சினிமா வாழ்க்கை ஆரம்பம்
“வீராப்பு” என்ற படத்தை கடந்த 2007ஆம் ஆண்டு தயாரித்தேன். அதன் பின்னர் சீரியலில் கவனம் செலுத்தி வந்தேன். ரவியின் பேச்சை கேட்டு தான் சினிமா பக்கம் வந்தேன். அடங்க மறு, பூமி, சைரன் ஆகிய மூன்று திரைப்படங்களை ரவியை வைத்து தயாரித்தேன்.
அந்தப் படங்களுக்காக கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் வரை ஃபைனான்சியர்களிடம் கடனாக வாங்கினேன். அதில் 25 சதவீதம் ரவிக்கு ஊதியமாக வழங்கியிருக்கிறேன். அவருடன் போடப்பட்ட ஒப்பந்தம், அவர் வங்கி கணக்குக்கு பணம் செலுத்திய விவரம், அவருக்காக நான் செலுத்திய வரி என அனைத்து ஆதாரங்களும் உள்ளன.
ஆனால் அவர் அதற்கு முற்றிலும் புறம்பாக பேசுகிறார். பல கோடி ரூபாய் நஷ்டத்தையும் மன உளைச்சலையும் மட்டுமே ஏற்றுக்கொண்டேன். இன்றுவரை அந்தக் கடனுக்குரிய வட்டியையும் நான் மட்டுமே கட்டுகிறேன்.
வேண்டுகோள் விடுத்த மாமியார்
இன்றும் நான் மகனாகவே நினைக்கும் திரு ஜெயம் ரவி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் எப்போதும் நீங்கள் கதாநாயகராகவே இருக்க வேண்டும். இது தான் இந்த அம்மாவின் ஆசை. பேர குழந்தைகளுக்காக, அந்த குழந்தைகளின் சந்தோஷத்திற்காக என் மகளும் மாப்பிள்ளையும் இணைந்து வாழ வேண்டும் என்று உளப்பூர்வமாக விரும்புகிறேன்.
அழகாக வாழ்ந்து வந்த ஒரு மகளை வாழாவெட்டியாக பார்க்கும் துயரம் ஒரு தாயின் மனதிற்குதான் தெரியும். அந்த துர்பாக்கியம் எந்தப் பெற்றோருக்கும் வரக்கூடாது.
ஊடக நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் ஏற்கனவே நான் அனுபவித்து வரும் வேதனைகளோடு மகளின் குடும்பத்தை பிரித்தவள், சித்திரவதை செய்த மாமியார் என்று புதிய வேதனையையும் என் மீது சுமத்தாதீர்கள். அதை தாங்கும் சக்தி என் மனதிற்கு இல்லை..” என குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |