ஆரியின் பிறந்தநாளுக்கு அனிதா கொடுத்தது என்ன தெரியுமா? வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்
இன்று பிறந்தநாள் கொண்டாடும் பிக் பாஸ் 4 டைட்டில் வின்னர் ஆரிக்கு திரையுலகை சேர்ந்தவர்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். படங்களில் நடித்து வருவதுடன், சமூக சேவையும் செய்து வரும் ஆரி உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டிலை வென்றார்.
பிக் பாஸ் வீட்டில் அவர் நடந்து கொண்ட விதம் பலருக்கும் பிடித்தது. அண்மையில் கூட அவர் அனிதா சம்பத்தின் வீட்டிற்கு சென்றார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு சந்தோஷப்பட்டார் அனிதா.
ஆரி இன்று தன் பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு அனிதா மட்டுமின்றி பிக்பாஸ் பிரபலங்கள் அனைவரும் வாழ்த்து கூறியுள்ளதோடு, திரையுலகை சேர்ந்தவர்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். #HBDAari என்கிற ஹேஷ்டேகுடன் ட்வீட் செய்து கொண்டிருக்கிறார்கள்.
தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைத்து உள்ளங்களுக்கும் ஆரி தனது நன்றியை தனது பாணியில் தெரிவித்துள்ளார்.