பாலாவை ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்புங்க... இல்லைனா இதை செய்ங்க! பிரபல இசையமைப்பாளர் ஆவேச கருத்து
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில தினங்களாக பாலா ஆரி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
பாலாவின் இந்த செயலை பலரும் கண்டித்து வருவதோடு பாலாவிற்கு ரெட் கார்டு கொடுத்து வெளியில் அனுப்ப வேண்டும் என்று கூறி வருகின்றனர்.
இந்நிலையில் இருவருக்குமிடையே எற்பட்ட சண்டை குறித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தனது முகநூலில் பதிவிட்டுள்ளதாவது, கமல்ஹாசன் Bigg Boss நிகழ்ச்சியை அடிக்கடி இது பல்வேறு வயதினரும் பார்க்கிற ஷோ என்கிறார்.
அது உண்மை என்றால், பாலாஜி வெளியே அனுப்பப்பட வேண்டும். அல்லது இந்த நிகழ்ச்சிக்கு ‘A’ certificate கொடுத்து, ‘வயது வந்தவர்களுக்கு மட்டும்’ என்று தெளிவாக நிர்ணயம் செய்யவேண்டும் .
இந்த நிகழ்ச்சியை முழுக்க வார்த்தை ஒன்றுதான் இருக்கிறது முந்தைய சீசன்களில் கூட கத்துவது சத்தம் போடுவது என்று இருந்தது ஆனால் ஜனவரி 1ஆம் தேதி ஒளிபரப்பான ஆனால் நிகழ்ச்சி அனைத்து எல்லைகளையும் மீறி விட்டது