இன்று ஆனி திருமஞ்சனம்! இப்படி விரதம் இருந்து நடராஜ பெருமானை தரிசித்தால் கஷ்டங்கள் நீங்கும்
ஆனி திருமஞ்சனம் என்பது ஆனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரத்தில் நடராஜபெருமானுக்கு நடைபெறும் அபிஷேகம் மற்றும் ஆராதனையைக் குறிக்கும்.
ஆடல்நாயகன் நடராஜ பெருமானை அலங்காரங்கள் செய்து, அவருடைய நடனத் திருக்கோலத்தை தரிசிக்கும் திருநாள் என்றும் குறிப்பிடலாம்.
தேவர்கள் தினமும் ஆறு முறை நடராஜருக்கு அபிஷேகம் செய்து வழிபடுவதாக ஐதீகம். அதாவது அவர்களுக்கு ஒருநாள் என்பது, பூலோகத்தில் ஒரு ஆண்டுக்குச் சமம்.
இதன் அடிப்படையில், சிவாலயங்களில் ஆண்டுக்கு ஆறு முறை நடராஜருக்கு விமரிசையாக அபிஷேகம் நடக்கிறது.
மூன்று முறை திதியிலும், மூன்று முறை நட்சத்திர நாளிலும் அபிஷேகங்கள் நடைபெறுகின்றன.
இதில் மிகச்சிறப்பானவை மார்கழி திருவாதிரை, சித்திரை திருவோணம் மற்றும் ஆனி உத்திர நட்சத்திர நாட்கள்.
ஆவணி, புரட்டாசி, மாசி மாத வளர்பிறை சதுர்த்தசி முதலான திதிகளிள் நடராஜருக்கு அவருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.
அதாவது மனிதக் கணக்கில், ஒரு வருடத்துக்கு ஆறு அபிஷேகங்கள். தேவர்களின் கணக்கில் ஒருநாளில் ஆறுகாலத்தில் அபிஷேகங்கள் என அவை கணக்கிடப்படுகின்றன.

ஆனி திருமஞ்சனம்
ஆனி மாத கார்த்திகை நட்சத்திரத்தில் இந்த ஆனி திருமஞ்சன விழா தொடங்குகிறது.
இன்று நாள் முழுவதும் உபவாசம் இருந்து மாலையில் சிவன் கோவிலுக்கு சென்று நடராஜரை வழிபாடு செய்தால் விருப்பங்கள் நிறைவேறும்.
நாள் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதவர்கள் பால், பழங்களை மட்டும் உண்டும் உபவாசம் இருக்கலாம்.
அப்படி விரதம் இருந்து தரிசனத்தை கண்டால் பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாவும், தம்பதிகளுக்கு நல்வாழ்வு கிடைக்கும் என நம்பப்படுகிறது.
கன்னிப்பெண்களாக இருந்தால் விரைவில் நல்ல வரனும், ஆண்களுக்கு செல்வ வளமும் கூடும் என்பதும் நம்பிக்கை!!!