சூரிய பெயர்ச்சியால் கொட்டும் பேரதிர்ஷ்டம்! ஆனி மாதத்தில் திடீர் பணவரவு எந்த ராசிக்கு?
ஆனி மாதம் சூர்ய பகவான் மிதுன ராசிக்கு பெயர்ச்சியாகி சஞ்சரிக்கும் காலம் என்பதால் இந்த மாதத்தில் திடீர் பண ஆதாயம், தொழிலில் முன்னேற்றம் அடையும் ராசிகளைக் குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
பொதுவாக ஜோதிடத்தில் நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் திகழ்கின்றார். இத்தருணத்தில் புதன் பகவானை அதிபதியாக கொண்ட மிதுன ராசியில் சூரியன் பெயர்ச்சியடைகின்றார்.
இந்த மாதத்தில் சூரியனின் சஞ்சாரம் மற்றும் கிரக அமைப்பினால், சில ராசிகளுக்கு அதிர்ஷ்டமும் காணப்படுகின்றது. அதிலும் ஒரு ராசிக்கு 3,6,10,11 ஆகிய இடங்களில் சூரியன் சஞ்சரித்தால் அதீத நன்மையையும் பெறலாம்.
மேஷம்
சூரிய பெயர்ச்சியான இந்த ஆனி மாதத்தில் மேஷ ராசியில் 3ம் வீட்டில் சஞ்சரித்தால், நீங்கள் எடுக்கும் எந்தவொரு முடிவும் அதிஷ்டத்தில் முடியும், குடும்பம், பணியிடத்தில் எதிரிகளின் தொல்லையும் நீங்கும். மேஷ ராசிக்கு 5ம் வீட்டு அதிபதி சூரியன் என்பதால் குழந்தைகள் விடயத்தில் நல்ல செய்திகள் வருவதுன், உறவுகளின் ஆதரவும் கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் அதிபதியான சூரியன் இந்த ஆனி மாதத்தில் 11ம் வீடான லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்க உள்ளதால், வருமானத்தில் நல்ல வளர்ச்சியும், நிதிநிலை வலுவடையவும் செய்கின்றது.
புதிய வருமானம் கிடைப்பதுடன், அதிக லாபத்துடனும் யோகம் கிடைக்கும். புதிய சொத்து மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
கன்னி
கன்னி ராசியைப் பொறுத்தவரையில் 12ம் வீட்டு விரய அதிபதி சூரியன், உங்களது ராசிக்கு 10ம் வீடான கர்ம, தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்க உள்ளதால், நீங்கள் முன்னெடுக்கும் புதிய முயற்சிகள் அனைத்தும் நல்ல வெற்றியில் முடியும்.
அதுமட்டுமின்றி கடுமையான வேலை கூட மிகவும் சுலபமாகவே முடியும், வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
மகரம்
மகர ராசிக்கு 6ம் வீடான ரண, ருண, ரோக ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிக்கிறார். பொதுவாக ஆரோக்கியத்தை வழங்கக்கூடிய சூரிய பகவான், நோய் ஸ்தானத்தில் சஞ்சரிக்கக்கூடிய இந்த மாதத்தில் உங்களின் ஆரோக்கியம் மேம்படுவதுடன், சூறுசுறுப்புடனும் இருப்பீர்கள், எந்தவொரு செயலையும் நல்லபடியாக செய்து லாபம் அடைவீர்கள்.