கையில் மிதக்கும் பூ அல்லவா? பாவனியுடன் நடுரோட்டில் ரொமான்ஸ்
பாவனியை நடுரோட்டில் செந்தூக்காக தூக்கிக் கொண்டு நடக்கும் அமீரின் வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சின்னத்திரை குயின்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிய ரெட்டை வால் குருவி, தவணை முறை வாழ்க்கை போன்ற பல சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகியவர் நடிகை பாவனி.
இதனை தொடர்ந்து இவர் 'சின்ன தம்பி' என்ற சீரியலிலும் இவருக்கு மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பு கிடைத்தது. ஆனாலும் சில தவிர்க்க முடியாத காரணங்களால் சீரியலை விட்டு விலகினார்.
பாவனி, பிரபலம் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவரின் திருமணத்திற்கு பின்னர் சில காரணங்களால் கணவர் தற்கொலை செய்துக் கொண்டார்.
கணவர் தற்கொலை பார்த்த பாவனி மீடியாத்துறையிலிருந்து விலகி தனிமையில் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் தான் பிக் பாஸ் சீசன் 5க்கு முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியில் வரும் போது பாவனியாக சென்றவர் அமீர்- பாவனியாக தான் வெளியில் வந்தார். வெளியில் வந்தவுடன் அதிகமாக விமர்சிக்கபட்டார்.
நடுரோட்டில் ரொமான்ஸ் காட்டும் ஜோடிகள்
அப்போது அமிர் என்னுடைய நல்ல நண்பர் எனக் கூறி வந்தார் பாவனி. ஆனால் காலப்போக்கில் இவர்கள் காதலிப்பதை கேமராவின் முன் ஒப்பு கொண்டார்கள்.
இவர்களின் திருமணம் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் கூறியிருக்கிறார்கள்.
இந்த நிலையில் பாவனியை செந்தூக்காக நடுரோட்டில் தூக்கிக் கொண்டும் செல்லும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இவர்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வந்த நிலையில் தற்போது இந்த வீடியோக்காட்சி ரசிகர்கள் மத்தியில் சிறிய சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதனை பார்த்த நெட்டிசன்கள், "ரீலுல பண்ண வேண்டியது எல்லாம் ரியாலு பண்ணறாங்களே” என கலாய்த்து வருகிறார்கள்.