திருமணத்திற்கு முன்பே வெளிநாட்டுக்கு ஹனீமூன் சென்ற பிரபலங்கள்! பரபரப்பை ஏற்படுத்தும் புகைப்படம்!!
இன்றும் பிக் பாஸ் காதல் ஜோடிகளாக வலம் வரும் பாவனி, அமீர் திருமணத்திற்கு முன்பே வெளிநாட்டிற்கு ஹனீமூன் செல்வதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மீண்டு வந்த பாவனியின் தருணங்கள்
சின்னத்திரை பிரபலங்களில் ஒருவரான நடிகை பாவனி ரெட்டி, தன்னுடைய முதல் கணவர் இழப்பிற்கு பின் மீடியாத்துறையிலிருந்து முற்றாக விலகியிருந்தார்.
இதனை தொடர்ந்து மீடியாவிற்கு மீண்டும் ஓர் அறிமுகத்தை கொடுத்தது பிக் பாஸ் எனக் கூறினால் மிகையாகாது. இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த பாவானி அமீருடன் காதல் சர்ச்சையில் சிக்கியிருந்தார்.
மேலும் இவர்கள் பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேறியதும் திருமணம் செய்துக் கொள்வார்கள் என தகவல் வெளியாகி வந்தது.
திருமணம் தொடர்பில் பாவனியின் முடிவு
இதனை தொடர்ந்து திருமணம் குறித்து முக்கிய நிகழ்வொன்றில் பேசும் போது பாவனி, “தன்னுடைய முதல் கணவரை மறக்கமுடியவில்லையெனவும், அமீர் தன்னுடன் இருப்பது மகிழ்ச்சியாக இருப்பதாகவும்” ஒரு குழப்பமான பதிலை கூறியிருந்தார்.
இந்நிலையில் தற்போது இருவரும் வெளிநாட்டிற்கு செல்லும் போது எடுக்கபட்ட புகைப்படத்தை “டுபாய்” என குறிப்பிட்டு வெளியிட்டுள்ளனர்.
இதனை பார்த்த ரசிகர் வட்டாரங்கள் “திருமணத்திற்கு முன் ஹனீமூன் செல்கிறார்கள்” என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
மேலும் இவர்களின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.