காதலிக்கு கோடி கோடியாய் செலவு செய்யும் அமீர்.. ஏன் வீடியோ போட்டு பணம் கேட்டாரு? விளாசும் நெட்டிசன்ஸ்!
காதலிக்கு கோடி கோடியாய் செலவு செய்யும் அமீர் பிள்ளைகளுக்கு உதவி கேட்டு சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட காணொளி சர்ச்சை கிளப்பியுள்ளது.
அமீர் - பாவனி
நடனத்தை தன்னுடைய உயிர் மூச்சாக கொண்டு பிரபல தொலைக்காட்சியில் சாதித்தவர் தான் அமீர்.
இவர் மீடியாவிற்குள் வரும் போது நடனம் மாத்திரம் தான் தெரியும்.
இதனை தொடர்ந்து தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் எண்ட்ரி கொடுத்தார்.
பின்னர் அங்குள்ள பாவனியை காதலித்து இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகி விட்டார்.
இந்த நிலையில் பாவனி - அமீருடன் என இருவரும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.
அந்த வகையில் பாவனியுடன் இணைந்து சுற்றுலா செல்லும் புகைப்படங்கள், போட்டோ ஷீட் புகைப்படங்கள் என செலவு செய்து சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
நெட்டிசன்கள் பிடியில் சிக்கிய அமீர்
இப்படியொரு நிலையில் தற்போது பட தயாரிக்கும் முயற்சியிலும் அமீர் இறங்கியுள்ளார்.
இதனை தொடர்ந்து சமீபத்தில் இரண்டு குழந்தைகளை படிக்க வைப்பதற்காக சமூக வலைத்தளங்களில் உள்ள இணையவாசிகளிடம் உதவி கேட்டு ஒரு காணொளியை பகிர்ந்துள்ளார்.
அதனை பார்த்த இணையவாசிகள், “ நீங்கள் காதலிக்கு செலவு செய்யும் பணத்தை இதற்கு செலவு செய்யலாமே.. கோடி கோடியாய் பணம் வைத்து ஏன் இணையத்தில் பணம் கேட்கிறீர்கள்..” என விளாசியுள்ளார்கள்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் இருக்கும் அமீர் - பாவனி ரசிகர்களின் கவனங்களை ஈர்த்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |