குழந்தை வரம் வேண்டுவோர் செய்ய வேண்டிய பரிகாரம்: நாளை அவசியம் செய்ங்க
ஆடி மாம் அம்பாளுக்கு மிக விமர்சையான மாதம் என்பதால் பக்தர்கள் பண்டிகை போன்று கொண்டாடுவார்கள்.
நாளைய தினம் ஆடிப்பூரம் நாள் என்பதால் புதிதாக திருமணம் செய்தவர்கள் சில பரிகாரங்கள் செய்வார். ஆடிப்பூரம் எனப்படுவது அம்மனுக்கு நடத்தப்படும் வளைகாப்பு திருவிழாவாகும்.
ஆடிமாதம் பூர நட்சத்திரத்தில் தான் அம்மன் தோன்றினாள் என புராணங்கள் கூறுகின்றது. ஆண்டாள் அவதார நட்சத்திரமும் ஆடிப்பூரம் என கூறப்படுகிறது.
இந்த வருடம் ஆடிப்பூரம் ஜூலை 28ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அதாவது, பூரம் நட்சத்திரம் ஜூலை 27ஆம் தேதி மாலை 6.55 மணிக்கு தொடங்கி, ஜூலை 28ஆம் தேதி இரவு 8 மணி வரை இருக்கும்.
அந்த வகையில் ஆடிப்பூரம் செய்ய வேண்டிய முக்கியமான பரிகாரம் பற்றி தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
அம்மனுக்கு நடக்கும் வளைகாப்பு
ஆடி மாதத்தில் வெள்ளி, செவ்வாய், ஞாயிறு ஆகிய கிழமைகளில் வழிபாடு செய்தால் பலன்கள் அதிகமாக கிடைக்கும் என்பார்கள். இவ்வளவு சிறப்பு கொண்டிருக்கும் ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரம் அம்பிகைக்கு மிகவும் உகந்த நாள்.
ஆடிப்பூரம் விழா ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது கொண்டாடப்படுகிறமு. அம்பாளுக்கு உரிய திருநாளாகவும் பார்க்கப்படுகிறது.
இந்த தினத்தில் உமாதேவி தோன்றுவார் என்பது ஐதீகம். சித்தர்களும், யோகிகளும் இந்த நாளில் தவத்தை தொடங்கியதாக புராணக்கதைகள் உள்ளன.
ஆடிப்பூரத்தை ஆண்டாள் ஜெயந்தியாகவும் 10 நாள் உற்சவமாக ஸ்ரீவில்லிபுத்தூரில் கோலாகலமாக கொண்டாடுவார்கள். அத்துடன் ஆடிப்பூர நாளில் அம்மன் கோயில்களில் அம்மனுக்கு வளைகாப்பு விழா நடத்துவார்கள்.
பிள்ளை வரம் கொடுக்கும் பரிகாரம்
மேலும், அம்மனுக்கு மஞ்சள் காப்பு, சந்தனக்காப்பு, குங்குமக்காப்பு அணிவித்து வளைகாப்பு செய்வார்கள். அம்மனை முழுவதுமாக கண்ணாடி வளையல்களில் அலங்காரம் செய்து வழிபடுவார்கள். அதே போன்று பெண்களுக்கு பிரசாதமாக கண்ணாடி வளையல்கள் கொடுப்பது வழக்கம்.
இந்த ஆடிப்பூரத்தில் அம்பாளின் அருளை பெற அம்மனுக்கு வளைகாப்பு நடத்தி, அவருக்கு அணிவித்த வளையல்களில் இரண்டு வாங்கி பெண்களுக்கு அணிவித்தால் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்படும்.
பிள்ளை வரம் வேண்டுபவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது. அதே சமயம் திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
