ஆடி பெருக்கு 2023... புதுமணத் தம்பதிகள் தாலி மாற்ற சிறந்த நேரம் இது தான்
ஆடி மாதம் முழுவதும் அம்மனுக்கு உகந்த மாதம். இந்த மாதத்தில் அம்மனுக்கு பல சடங்குகளும் திருவிழாக்களும் நடைபெறும்.
அதுமட்டுமில்லாமல் ஆடி மாதத்தில் வரும் ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி தினங்களும் மிக விஷேட தினமாக இருக்கும். அது போல ஆடியில் பல விசேட நிகழ்வுகள் இடம்பெறுவதுண்டு அதில் மிக முக்கியமானது இந்த ஆடிப் பெருக்கு.
இந்த ஆடிப் பெருக்கானது ஆடி மாதம் 18ஆம் திகதியைக் குறிக்கும். இந்த 18ஆம் நாளில் நதிகளில் நீர் பெருக்கு ஏற்படும் என்பது மக்களின் நம்பிக்கை.
இந்த வருடத்திற்கான ஆடி பெருக்கு ஆகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி வியாழக்கிழமை வந்திருக்கிறது. இந்த தினத்தில் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
தாலி கயிறு மாற்றுதல்
திருமணம் முடித்த புதுமணத் தம்பதிகளுக்கு இந்த ஆடி 18 என்பது மிகவும் முக்கியமானது. புதுமணத்தம்பதிகள் இந்த ஆடி பெருக்கு தினத்தில் மனைவிமார்களுக்கு அவர்களது கணவர்கள் தாலி பிரித்து மஞ்சள் கயிற்றில் புது தாலியை அணிவிப்பார்கள்.
இதனை புதுமணத் தம்பதிகள் மாத்திரமல்லாது சுமங்கலி பெண்களும் புதிய மஞ்சள் கயிற்றில் தாலியை மாற்றிக் கொள்வார்கள். திருமணமாகாத பெண்கள் தங்களுக்கு திருமணம் நடக்க வேண்டும் என்று மஞ்சள் கயிற்றை கழுத்தில் கட்டி வழிபாடுகளை செய்வார்கள்.
இந்த ஆண்டின் ஆடி பெருக்கு தினத்தில் காலை 10.35 மணி முதல் 11.45 மணி வரை இருக்கும் நல்ல நேரத்தில் தான் இந்த தாலி கயிறு மாற்றிக் கொள்ள சிறந்த நேரம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |