ஆடி வெள்ளி ஸ்பெஷல்... செட்டிநாடு பால் கொழுக்கட்டை
ஆடி மாதத்தில் செட்டிநாடு ஸ்பெஷல் பால் கொழுக்கட்டை எவ்வாறு செய்வது என்பதை தெரிந்து கொள்வோம்.
ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகவும், புனிதமான மாதமாகவும் கருதப்படுகின்றது. ஆடி வெள்ளி, செவ்வாய் நாட்கள் அம்மனுக்கு விரதம் இருந்து பூஜைகளை செய்ய பெண்கள் அதிகம் விரும்புகின்றனர்.
மேலும் அம்மனுக்கு கூல் காய்ச்சி ஊற்றுவது, பாயசாம் போன்ற பிரசாதங்கள் தானமாக கொடுப்பதையும் விரும்புகின்றனர்.
இவ்வாறான பிரசாதத்தில் ஒன்று பால் கொழுக்கட்டை ஆகும். அம்மனுக்கு படைத்து வழிபடும் பால் கொழுக்கட்டை எ்வவாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்
கொழுக்கட்டை/இடியாப்ப மாவு - 1 3/4 கப்
உப்பு - 1/2 டீஸ்பூன்
சுடுநீர் - தேவையான அளவு
தேங்காய் பாலுக்கு
துருவிய தேங்காய் - 2 கப்
ஏலக்காய் - 3
வெதுவெதுப்பான நீர் - தேவையான அளவு
வெல்ல நீருக்கு
பொடித்த வெல்லம் - 1 1/4 கப்
தண்ணீர் - 1/4 கப்
கொழுக்கட்டைக்கு
தண்ணீர் - 4 கப்
உருட்டிய கொழுக்கட்டை
வெல்ல நீர்
தேங்காய் பால்
துருவிய தேங்காய்

செய்முறை
பாத்திரம் ஒன்றில் 5 கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் கொதிக்க வைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் கொழுக்கட்டை அல்லது இடியாப்ப மாவை எடுத்து, அதில் சிறிதளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
பின்பு சுடுதண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கரண்டி ஒன்றினால் கிளறிவிட்டு, நன்றாக கொழுக்கட்டை செய்யுமம் பதத்திற்கு கிளறிக்கொள்ளவும்.
பிசைந்த வைத்த மாவை உருண்டையாகவோ, குச்சியாகவோ உருட்டி வைத்துக் கொள்ளவும். மிக்ஸி ஜார் ஒன்றில் துருவிய தேங்காயம் மற்றும் ஏலக்காய் மற்றும் முக்கால் கப் தண்ணீர் சேர்த்து மென்மையாக அரைத்து தேங்காய் பால் எடுத்துக் கொள்ளவும்.

மீண்டும் சக்கையை ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு அரைத்து இரண்டாவது தேங்காய் பால் எடுத்துக் கொள்ளவும்.
பாத்திரம் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் பொடித்த வெல்லம் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரைத்து பாகு எடுத்துக் கொள்ளவும்.
அடிகனமான பாத்திரம் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் 4 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து, அதில் உருட்டி வைத்த கொழுக்கட்டையை சேர்த்து 4 நிமிடம் மிதமான தீயில் வேக வைக்கவும்.

சிறிது கிளறிவிட்டு மீண்டும் 5 நிமிடம் வேக வைத்து, அதற்குள் வெல்ல நீர் சேர்த்து 3 நிமிடம் கொதிக்கவிடவும்.
அடுத்ததாக தேங்காய் பால் சேர்த்து கிளறிவிட்டு அடுப்பை அணைத்துவிட்டு, கடைசியாக துருவிய தேங்காய் சிறிது தூவி பரிமாறவும். சுவையான பால் கொழுக்கட்டை தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |