திமிங்கலங்களுக்கு மத்தியில் தனியாக சிக்கிய இளைஞன் நடந்தது என்ன?
பனிச்சறுக்கு விளையாட்டு பயிற்சியாளரான டாம் வாடிங்டன், சமீபத்தில் அட்லாண்டிக் பெருங்கடலில் யாரும் எளிதில் செய்ய முடியாத சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.
funny video: பெரிய மீனை பிடித்துவிட்டு சாப்பிட முடியாமல் போராடும் சிறிய பறவை... களிப்பூட்டும் காட்சி!
வைரல் வீடியோ
கனடாவின் நியூஃபவுண்ட்லேண்டிலிருந்து புறப்பட்ட அனுபவம் மிக்க பனிச்சறுக்கு விளையாட்டு பயிற்சியாளரான டாம் வாடிங்டன் இங்கிலாந்தின் ஸ்கில்லி தீவுகளை அடைந்து தனது பயணத்தை முடித்துகொண்டார்.
இந்தப் பயணத்தில் சுமார் 2,000 கடல் மைல் (சுமார் 3,704 கிலோமீட்டர்) தூரத்தை வெறும் 45 நாட்கள், 5 மணி நேரம், 15 நிமிடங்களில் வாடிங்டன் கடந்துள்ளார்.
இவர் இதை செய்ததற்கான காரணம் 2020-ம் ஆண்டு கார் விபத்தில் பரிதாபமாக இறந்த அவரது காதலி ஹாட்டி ஹாரிசனின் நினைவாக இந்த குறிப்பிடத்தக்க சாதனையை வாடிங்டன் மேற்கொண்டார்.
இந்த பயணத்தில் இவர் பல சவால்களை மேற்கொண்டார்.ஒரு சமயம் தன்னுடைய படகை சுற்றிலும் பைலட் திமிங்கல கூட்டங்களால் சூழப்பட்டிருப்பதைக் கண்டார்.
ஆரம்பத்தில் சில திமிங்கலங்கள் மட்டுமே வந்த நிலையில், நேரம் செல்ல செல்ல அவற்றின் எண்ணிக்கை நூற்றுக்கணக்கானதாக மாறி, படகை சுற்றி வளைக்க ஆரம்பித்தன.
இதில் அவர் உயிர் பிழைத்தது அதிர்ஷ்டம் என்று வாடிங்கடனின் அவரது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கில்இந்த வீடியோ காட்சியை பகிர்ந்துள்ளார் இது தற்போது இணையம் முழுவதும் வைரலாகி வருகின்றன.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |