காதலியை பார்க்க புர்கா அணிந்து வந்த இளைஞர் - சந்தேகப்பட்டு வெளுத்து வாங்கிய பொதுமக்கள்
காதலியை தனிமையில் பார்க்க புர்கா அணிந்து வந்த இளைஞரை சந்தேகப்பட்டு வெளுத்து வாங்கிய பொதுமக்களால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புர்கா அணிந்து வந்த இளைஞர்
உத்திரப்பிரதேசம், ஆரைய்யா மாவட்டம், ஜெகன்நாத்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்சார். இவர் காதலித்து வந்த காதலியை பார்க்க முடியாமல் தவித்து வந்தார்.
இதனையடுத்து, காதலியை தனிமையில் பார்க்க புர்கா அணிந்து அன்சார் காதலி வசிக்கும் பகுதியில் சுற்றி சுற்றி வந்துள்ளார்.
இவர் புர்கா அணிந்து சுற்றி, சுற்றி வந்தது, அங்கிருந்த பொதுமக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
உடனே, அவரிடம் விசாரிக்க வந்த பொதுமக்களைப் பார்த்து ஓட ஆரம்பித்துள்ளார். அன்சாரை மடக்கிப்பிடித்த பொதுமக்கள் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அவர் பதில் ஏதும் சொல்லாமல் முழிக்க, குழந்தை கடத்துபவன் என்று நினைத்து அன்சாரியை பொதுமக்கள் அடித்து, துவைத்து வெளுத்து வாங்கினர். இது தொடர்பாக போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர்.
உடனே, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அன்சாரியிடம் விசாரணை நடத்தினர். அப்போது, காதலியை சந்திக்க அன்சாரி புர்கா அணிந்து வந்ததாக கூறியதால் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது.