சிறுத்தையுடன் சண்டையிட்ட பெண்: வைரலாகும் திக் திக் காட்சிகள்
இந்தியாவின் மும்பையில் வயதான பெண் ஒருவர் சிறுத்தையுடன் சண்டையிட்டு தப்பிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மும்பை கோரேகான் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், ஓய்வெடுப்பதற்காக வீட்டின் திறந்தவெளி பகுதியில் அமர்ந்திருந்தார்.
அப்போது, அங்கு மறைந்திருந்த சிறுத்தை ஒன்று குறித்த பெண்ணை தாக்கியுள்ளது.
உடனடியாக தன் கையிலிருந்த தடியால் அந்த சிறுத்தையை பெண் பலமாக ஓங்கி அடித்ததால் அங்கிருந்து சிறுத்தை ஓடிவிட்டது.
இதில் லேசான காயங்களுடன் மீட்கப்பட்ட பெண், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.
#WATCH | Mumbai: A woman barely survived an attack by a leopard in Goregaon area yesterday. The woman has been hospitalised with minor injuries.
— ANI (@ANI) September 30, 2021
(Visuals from CCTV footage of the incident) pic.twitter.com/c1Yx1xQNV8