ஆண்கள் இல்லாமல் பெண்கள் மட்டும் வாழும் கிராமம்: உருவான பின்னணி இது தான்
கென்யா நாட்டில் உள்ள கிராமத்தில் ஆண்கள் இல்லாமல் பெண்கள் மட்டும் வாழ்ந்து வரும் பின்னணியை தான் பார்க்க போகிறோம்.
பெண்களின் கிராமம்
பொதுவாக நகரங்கள் முதல் கிராமங்கள் வரை ஆண்கள் மற்றும் பெண்கள் சமமான விகித்ததில் தான் இருப்பார்கள். ஆனால், இந்த கிராமத்தில் மட்டும் தான் ஆண்கள் இல்லாமல் பெண்கள் மட்டும் இருக்கின்றனர்.
கென்யா நாட்டின் தலைநகரமான நைரோபியில் இருந்து சுமார் 380 கிலோ மீட்டர் தொலைவில் உமோஜா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஆண்கள் நுழைவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.
இங்கு, பெண்கள் மற்றும் குழந்தைகள் மட்டுமே வாழ்ந்து வருகின்றனர். இங்கு வாழும் பெண்கள் அனைவரும் மாசாய் என்ற சமூகத்தின் ஒரு பகுதியாக இருக்கும் சம்பூர் எனும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இந்த கிராமமானது சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு தான் உருவானது.
பின்னணி என்ன?
கடந்த 1990 -ம் ஆண்டுகளில் சம்பூர் இனத்தை சேர்ந்த பெண்களை பிரிட்டன் ராணுவ வீரர்கள் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால், இந்த பெண்களின் கணவர்கள் அவர்களை ஏற்க மறுத்துள்ளனர்.
இதனால், ஆவேசமடைந்த ரெபேக்கா லோலோ சோலி என்ற பெண் தன்னுடன் சேர்ந்த 15 பெண்களுடன் சேர்ந்து உமோஜா என்ற கிராமத்தை நிறுவியுள்ளார்.
தற்போது, இந்த குடும்பத்தில் 40 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் மணி மாலைகளை விற்று வருமானம் பெறுகின்றனர்.