பிசுபிசுப்பில்லாத மிருதுவான இட்லி வேணுமா? மாவை இப்படி அரைச்சு பாருங்க
இட்லி என்றால் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் நாம் என்னதான் இட்லி மாவு செய்தாலும் இட்லி செய்து எடுக்கும் போது அது கல்லு போலவே வரும்.
சிலது பிசுபிசுப்பு தன்மையுடன் இருக்கும். இந்த கல்லு தன்மை இல்லாலும் பிசுபிசுப்புத் தன்மை இல்லாமலும் இட்லியைமிருதுவாக பஞ்சு போல செய்ய வேண்டும் என்றால் வீட்டில் நமக்கு தெரிந்த சில சில விஷயங்களை பின்பற்றினால் போதும். இந்த இட்லி மாவை எப்படி அரைக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் தெளிவாக பார்க்க முடியும்.
இட்லி மாவு
முதலில் ஒரு கப் ரேசன் அரிசியை எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் கால் கப் பச்சரிசியை எடுத்துக்கொள்ள வேண்டும். இதை இரண்டையும் சேர்த்து தண்ணீர் ஊற்றி கழுவி எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும்.
அரிசி எடுத்த அதே கப்பில் உளுந்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதையும் கழுவி தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக்கொள்ள வேண்டும். உளுந்தை ஒரு அரை மணி நேரமும் அரிசியை ஒரு இரண்டு மணி நேரமும் ஊற வைக்க வேண்டும்.
பின்னர் உளுந்தை முதலில் அரைக்க வேண்டும். பின்னர் அரிசியை அரைக்க வேண்டும். இப்படி அரைக்கும் போது தண்ணீர் தெளித்து அரைக்க வேண்டும். இதை மொத்தமாக 10 நிமிடம் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
உப்பு தேவையான அளவு அரைக்கும் போதே போட வேண்டும். மாவு கெட்டியாக இருந்தால் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கலந்து விட வேண்டும். இந்த கலவையை 8 மணி நேரம் புளிக்க விட வேண்டும். இதன் பின்னர் இட்லி ஊற்றி எடுத்தால் மிருவான இட்லி வரும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |