பணத்தை அள்ளி அள்ளி வீசிய நபர் - ஓடி வந்து எடுத்த பொதுமக்கள்!
ஒரு நபர் பணத்தை அள்ளி அள்ளி வீசிய வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பணத்தை அள்ளி அள்ளி வீசிய நபர்
பணம் என்றால் பிணம் கூட வாய் திறக்கும் என்று பழமொழி உண்டு. ரோட்டில் செல்லும் போது பண நோட்டு கீழே இருந்தால் யாராக இருந்தாலும் சரி, சுற்றி பார்த்துவிட்டு குனிந்து பணத்தை எடுத்து விட்டு சென்று விடுவார்கள்.
சிலர் அந்த பணத்தை எடுத்து உரியவர்களிடம் கொடுக்க முயற்சி செய்வார்கள். சிலர் யாராவது நம்மை பார்க்கிறார்களா என்று நோட்டமிட்டுவிட்டு அங்கிருந்து ஓடி விடுவார்கள்.
ஆனால், தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகும் வீடியோவிலோ ஒருவர் பணத்தை வாரி வாரி இரைக்கிறார்.
அந்த வீடியோவில், ஒரு நபர் மேல் மாடியிலிருந்து பணத்தை அள்ளி அள்ளி வீசுகிறார். இதைப் பார்த்து அப்பகுதியில் மக்கள் ஓடி வந்து கூட்டமாக திரண்டினர். அந்த மனிதர் பணத்தை அள்ளி, அள்ளி வீசும்போது, மக்கள் கீழே விழும் பணத்தை முண்டியடித்துக் கொண்டு எடுக்கின்றனர்.
தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் வியப்பில் ஆச்சரியமடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.