கேன்டீனுக்கு வந்த இன்னொரு பிரச்சினை.. இந்த ரணகளத்தில் கோபிற்கு வந்த போன் கோல்! நடந்தது என்ன?
பாக்கியாவின் வளர்ச்சிக்கு தடையாக இன்னொரு நபர் சீரியலுக்கு என்றி கொடுக்கிறார்.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில் இன்று புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
எல்லா தில்லு முல்லு வேலைகளையும் பார்த்து விட்டு தற்போது அம்மாவுடன் கூட்டணி போட்டுக் கொண்டு சொகுசு வாழ்க்கையை கோபி வாழ்ந்து வருகிறார்.
பாக்கியாவின் வீட்டில் இருந்து கொண்டு அவர் வாழ்க்கை முன்னேற கூடாது எனவும் சில வேலைகளை பார்த்து வருகிறார். ஆனால் இதற்கு நேர் எதிராக ராதிகா தற்போது மாறியுள்ளார்.
இதனால் ராதிகா - கோபிற்குள் அடிக்கடி சண்டை வருகின்றது. இதற்கிடையில் பாக்கியாவின் கேன்டீன் திறப்பு விழாவிற்கு சென்று பழனிச்சாமியிடம் பாக்கியாவை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து முதல் நாள் கேன்டீனில் நடந்த சுவாரஸ்யமான விடயங்களை வீட்டிலுள்ளவர்களுடன் பாக்கியா பகிர்ந்து கொள்கிறார். இன்னும் இந்த பிஸ்னஸை எப்படி முன்னேற்றுவது என செழியனும் எழிலும் பிளான் போடுகிறார்கள்.
குதூகலிக்கும் கோபி
இந்த நிலையில் இன்றைய தினம் வெளியான எபிசோட்டில் பாக்கியாவின் கேன்டீன் சீல் வைக்கபட்டுள்ளது.
இதை கேட்டதும் பாக்யா வழமை போல் அவர் பக்கம் இருக்கும் நியாயத்தை எடுத்துச் சொல்கிறார். ஆனால் எதுவுமே பத்திரிகையாளர்கள் மற்றும் அரசு விடம் எடுபடாமல் போய்விட்டது.
இந்த செய்தி அனைத்து பக்கமும் பரவிடுகிறது. இதை தெரிந்து கொண்ட குடும்பத்தில் உள்ளவர்கள் ஷாக் ஆகுகிறார்கள். ஆனால் கோபி மட்டும் மனதிற்குள் “இதெல்லாம் பாக்யாவிற்கு தேவை தான்” என நினைக்கிறார்.
இப்படியொரு நிலையில் கோபிக்கு வங்கியிலிருந்து பணத்தை தரும்படி அழைப்பு வருகிறது. இவ்வளவு பிரச்சினை இருந்தாலும் பாக்கியா விழுந்து விட்டார் என கோபி மகிழ்ச்சியடைகிறார்.
பாக்கியாவிற்கு சார்பாக அடுத்து பழனிச்சாமி களத்தில் இறங்குகிறார்.
இதனை தொடர்ந்து பாக்கியலட்சுமியில் என்ன நடக்க போகின்றது என்பதனை காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.