குட்டையை இப்படி தான் கிராஸ் பண்ணனும்! பாடம் எடுத்த நபருக்கு பாடம் புகட்டிய விதி.... இறுதியில் நடந்த பரிதாபம்!
இணையத்தில் பல வீடியோக்கள் ஏதோ ஒரு செயல்களால் வைரலாகிறது. சிலர் செய்யும் குறும்பு விஷயங்களால் வீடியோக்கள் வைரலாகும், செல்லப்பிராணிகள் மற்றும் குழந்தைகளின் வீடியோக்கள் வைரலாவது வழக்கம்.
சிலரின் வீடியோக்கள் அழகிய நடிப்பு மற்றும் நடனத்தால் வைரலாகும். அதுவே சிலர் எடுக்கும் சாகசங்கள் மற்றும் முயற்சிகள் தவறாக முடியும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாவது உண்டு.
அந்த வகையில் இங்கு ஒரு வீடியோ இணையவாசிகள் மற்றும் நெட்டிசன்களை சிரிக்க வைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
சில நேரங்களில் நாம் குறுக்குவழியில் செல்லும் போது அது நமக்கே ஆபத்தானதாக முடியும். உதாரணத்திற்கு இந்த வீடியோவை எடுத்துக்கொள்ளலாம்.
அதில் வரும் நபர் சேரும் சகதியுமாக இருக்கும் குட்டையை சுற்றி செல்வதற்கு மலைத்து குறுக்கு வழியை பிரயோகித்தார். ஆனால் அதுவே அவருக்கு பாதகமாக முடிந்துள்ளது.