வீதியில் கிடைத்த ஒரு துண்டு காகிதம்.. ஒரே இரவில் கோடீஸ்வரரான நபர் - விபரம் இதோ
சாலையில் நடந்து செல்லும் போது ஒரு காகித துண்டு கிடந்துள்ளது. அதன் மூலம் சுமார் 20 கோடி ரூபாய் பணத்திற்கு ஒரு நபர் சொந்தக்காரர் ஆகி உள்ளார். இதற்கு நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது.

சாலையில் கிடந்த காகித துண்டு
பொதுவாக அதிர்ஷ்டம் எல்லோருக்கும் இருக்காது. ஏதோ ஒரு விதத்தில் அதிர்ஷ்டத்தை தேடி வரும். அது போல தான் தற்போது ஒரு விடயம் நடந்துள்ளது. சாலையில் ஒரு நபர் நடந்து செல்லும் போது அவருக்கு ஒரு காகிதத்துண்டு கிடைத்துள்ளது.
அதில் சுமார் 20 கோடி ரூபாய் பரிசு இருந்துள்ளது. கடந்த ஜனவரி 24ம் தேதி, கேரளாவின் கொச்சியில் கிறிஸ்துமஸ் பம்பர் லாட்டரி அறிவிக்கப்பட்டது.

இதில் XC 138455 என்ற டிக்கெட் எண்ணுக்கு முதல் பரிசுத் தொகை ரூ.20 கோடி விழுந்துள்ளது. ஆனால் அந்த பரிசித்தொகை விழுந்த டிக்டட் உரிமையாளரிடம் இருந்து தொலைந்துள்ளது.
இதை திரும்ப கண்டுபிடித்து எடுத்தவர் எர்ணாகுளத்தை சேர்ந்த நபர். இந்த நபர் இது ஒரு காகித துண்டு தான் என நினைத்துக்கொண்டிருக்கும் சமயத்தில் அது ஒரு பரிசுள்ள லாட்டரி சீட்டு என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த டிக்கெட்டின் அசல் உரிமையாளர் எர்ணாகுளத்தில் ஒரு பயண நிறுவனத்தை நடத்தி வரும் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி சஜிமோன் ஆவார்.

பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டபோது, தான் தொலைத்த டிக்கெட்டுக்கு ரூ.20 கோடி பரிசு அறிவிக்கப்பட்டதை அறிந்து அவர் கேரளாவில் உயர் நீதிமன்றத்தில் மன தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் மனைவியின் வீட்டிற்கு செல்லும் வழியில் டிக்கட் தொலைந்து விட்டதாக அவர் கூறி இருந்தார்.
ஆனால் அவர் கூறிய விடயத்தை உயர்நீதி மன்றம் மறுத்தது. இதன் பின்னர் கேரள உயர் நீதி மன்றம் லாட்டரி சீட்டை வைத்திருப்பருக்கே பசிசுத்தொகை சொந்தம் என தீர்ப்பு வழங்கியது.
இதன் மூலம் சாலையில் கிடந்த ஒரு டிக்கட்டால் குறிப்பிட்ட அந்த நபர் ஒரே இரவில் 20 கோடிக்கு சொந்தமாகி பணக்காரரானார். இதை தான் அதிர்ஷ்டம் என்று சொல்வார்களா?.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |