viral video: புற்றில் பால் ஊற்றினாலும் பாம்பு குடிக்காது! காரணத்துடன் விளக்கும் சிறுமி
பாம்புகள் பற்றி பலரும் அறிந்திராத பல விடயங்களை தனது மழழை மொழியில் இன்ஸ்டாகிராமில் பிரபலமாக அறியப்படும் சிறுமியொருவர் குறிப்பிட்டுள்ள வியப்பூட்டும் காணொளி தற்போது இணையத்தில் பெரும்பாலானவர்களின் கவனத்தையும் ஈர்த்து வருவதுடன்,பாராட்டுக்களையும் குவித்து வருகின்றது.
பொதுவாக தமிழ் சினிமாக்களிலும் சரி தொலைக்காட்சி தொடர்களிலும் சரி பாம்புகள் பழி வாங்குவது போன்ற காட்சிகளை ஒளி பரப்புகிறார்கள். உண்மையில், பாம்புகள் பழிவாங்குமா என எப்போதாவது சிந்தித்திருக்கின்றீர்களா?
அறிவியல் ஆய்வுகளின் பிரகாரம் பாம்புகள் யாரையும் பழிவாங்குவதும் இல்லை வேண்டும் என்று தீண்டவதும் இல்லை. உண்மையில் பாம்புகள் மிகவும் சாதுவானது.மனிதர்களை கண்டு பயந்து ஒதுங்கி போகவே உண்மையில் விரும்புகின்றது.

மேலும் பாம்புகள் பெரும்பாலும் கரையான் புற்றுகளில் தான் வாழ்கின்றது. இதில் பால் ஊற்றும் வழக்கமும் இந்து மத கலாசாரத்தில் காணப்படுகின்றது. ஆனால் பாம்புகள் பால் குடிப்பது கிடையாது. அறிவியல் ரீதியிலான ஆய்வுகளின் பிரகாரம் பாம்புகள் பால் குடிக்காது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் எதற்கு புற்றுக்குள் பால் ஊற்றுகிறார்கள் என்று சிந்திக்கின்றீர்களா? அதாவது சில பிரதேசங்களில் மனிதர்களை விட பாம்புகள் அதிகமாக காணப்பட்டன. ஆனால் இந்து சமயத்தை பின்பற்றும் மக்களுக்கு ஒரு உயிரினத்தை கொல்லும் உரிமை இல்லை.

எனவே அதனை கொல்லாமல் அதன் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று முயற்சி செய்தனர். அதன் விளைவாக தோன்றியதே பாம்பு புற்றில் பால் ஊற்றும் வழக்கம்.
அதாவது பாம்புகள் இனப்பெருக்கம் செய்யும் முறைமை சற்று வித்தியாசமானது.பெண் பாம்பு தான் உடலில் இருந்து ஒரு வித வாசனை திரவத்தை (பரோமோன்ஸ்) வெளிவிடும்.அதனை நுகர்ந்து தான் ஆண் பாம்புகள் பெண் பாம்பை தேடி வரும்.
அந்த வாசனையை தடுத்து பாம்புகளின் இனப்பெருக்கத்தை கட்டுபடுத்துவதே பாம்பு புற்றில் பால் ஊற்றுவதற்கு காரணம்.
அப்படிப்பட்ட அறிவியல் ரீதியாக விடயங்களை ஆராய்ந்து பாம்புகள் பற்றிய பல விடயங்களையும் துல்லியமாக கூறிப்பிட்டு சிறுமியொருவர் பேசும் மெய்சிலிர்க்க வைக்கும் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |