ஜன நாயகன் படம் வெளியாகும் நாளில் அரசு விடுமுறையா?- அதிமுக விமர்சனம்
மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், தவெக அரசு மற்றும் முதல்வர் விஜய் குறித்து விமர்சனம் செய்தார்.
அவர் கூறியதாவது..,
தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் செயல்படுத்த முடியாதவை என்று அவர் குற்றம்சாட்டினார்.
நிதி ஆதாரங்களை கணக்கில் கொள்ளாமல்,காணல் நீரைப் போன்ற திட்டங்களை தேர்தல் அறிக்கையில் விஜய் அறிவித்திருந்தார்.
மேலும், வீடுகளுக்கு மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் அறிவித்துவிட்டு, தற்போது 500 யூனிட் வரை பயன்படுத்தும் நுகர்வோருக்கு மட்டுமே 200 யூனிட் இலவச மின்சாரம் என அறிவித்திருப்பது கண்துடைப்பு என்று விமர்சித்தார்.
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்மாமன் திட்டத்தின் கீழ் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தையும் அவர் கேள்வி எழுப்பினார்.
இந்தத் திட்டத்தால் அரசுக்கு அதிக செலவு ஏற்படும் என்றும், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு இது எந்த அளவுக்கு உதவும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும், ஜன நாயகன் திரைப்பட வெளியீட்டு விழாவை திருவிழா போல கொண்டாட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக, படம் வெளியாகும் நாளில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று ஆர்.பி. உதயகுமார் விமர்சித்தார்.