என்னா நடிப்புடா சாமி...அம்மாவை போல் நடித்த சிறுமி! வேறலெவல் ரியக்சன்
கொரோனா காரணமாக வீட்டில் இருந்து வேலை செய்த பெண் ஒருவரின் மகள், தனது தாய் வேலை செய்யும்போது கொடுக்கும் ரியாக்ஷனை இமிட்டேட் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
அமெரிக்காவின் வெர்ஜீனியா மாகாணத்தைச் சேர்ந்த கொலின் சுலிஸ், கொரோனா காரணமாக வீட்டில் இருந்தபடியே வேலை செய்கிறார்.
அவர் கடந்த ஏப்ரல் மாதம் லிங்கிட் இன் தளத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்தார். அதில், வீட்டில் இருந்து வேலை செய்யும் அவர், பணியின்போது எப்படியெல்லாம் ரியாக்ட் செய்வார் என கொலினின் 8 வயது மகள் அப்படியே நடித்துக் காட்டுகிறார்.
கியூட்டாக இருக்கும் இந்த வீடியோவை விளையாட்டாக பதிவு செய்த நிலையில், அவர் எதிர்பார்க்காத அளவுக்கு லட்சக்கணக்கானோர் ரசித்துள்ளனர்.
Crazy - I posted a silly video of my daughter imitating me working on linked in and have 5M+ views 2 days later #workfromhome https://t.co/8QB7x1YPnM
— Colleen Chulis (@ColleenChulis) April 18, 2021